MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 23 வயதில் திருமணம்.. 30 வயதில் 2 குழந்தைக்கு தாயாக ஆசை பட்ட சாய் பல்லவி! கல்யாணத்தை தள்ளி போட்டது ஏன்?

23 வயதில் திருமணம்.. 30 வயதில் 2 குழந்தைக்கு தாயாக ஆசை பட்ட சாய் பல்லவி! கல்யாணத்தை தள்ளி போட்டது ஏன்?

நடிகை சாய் பல்லவி 23 வயதில் திருமணம் செய்து கொள்ள ஆசை பட்ட நிலையில்... அந்த ஆசை ஏன் நிறைவேறாமல் போனது என்பது பற்றி அவர் பழைய பேட்டியில் கூறியுள்ள தகவல் தற்போது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 28 2024, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகை சாய் பல்லவி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில்... தன்னுடைய திருமணத்திற்கு முன்பே, தன்னுடைய தங்கையின் காதலுக்கு பச்சை கொடி காட்டி, திருமண நிச்சயதார்தத்தையும் அமோகமாக நடத்தி வைத்து விட்டார். சமீபத்தில் இவரின் தங்கை, பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

கூடிய விரைவில் பூஜா கண்ணனின் திருமண தேதி அறிவிக்கப்படும் என... எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் பலர் ஏன், சாய் பல்லவி தன்னுடைய திருமணத்தை தள்ளி போடுகிறார் என்பது தான். 

லவ் யூ லாட்ஸ் உயிரே.. தன் பெயரை கையில் பச்சை குத்திய ரசிகையை பார்த்து எமோஷ்னலான KPY பாலா! வெளியான புகைப்படம்!
 

37

சாய் பல்லவி தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம், பீக்கில் இருக்கும் இவரது சினிமா கேரியர் தான் என கூறப்படுகிறது. தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக 'டாண்டல்' படத்தில் நடிக்கும் சாய்பல்லவி, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK 21 படத்தில் நடித்து வருகிறார்.  ஹிந்தியிலும், இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 

47

தன்னுடைய 31 வயது வரை, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சாய் பல்லவி... தன்னுடைய 23 வயதில் திருமணம் செய்து கொண்டு, 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என நினைத்தவர் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதான் உண்மை. இந்த தகவலை அவரே தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

நடிகை இனியாவா இது? புது தொழிலில் இறங்கியதும் இப்படி கொழுக்கு மொழுக்குன்னு மாறிட்டாங்களே! ரீசென்ட் போட்டோஸ்!
 

57

தெலுங்கு திரையுலகில் இவர் அறிமுகமான போது பல தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ​​சாய் பல்லவியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு மிகவும் போல்டாக, தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.
 

67

அப்போது அவர் கூறியதாவது, 'எனக்கு 18 வயது இருக்கும் போது, ​​23 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எம்.பி.பி.எஸ் படிக்கும் போது கூட ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பின்னர் அந்த முடிவுகளை மாற்றினேன்.

விவாகரத்தான ஒரே வருடத்தில் மறுமணம் செய்யபோவதை உறுதி செய்த மெகா ஸ்டார் மகள் நிஹாரிகா! திருமணம் எப்போது?
 

77
Sai Pallavi

Sai Pallavi

எங்கள் வீட்டில் சில முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருந்ததால், திருமணத்தை தள்ளி வைத்தேன். பின்னர் ஒரு நடிகையாக நல்ல பெயர் கிடைத்ததால், திருமணத்துக்கு கால அவகாசம் நீட்டினேன்’. என திருமணம் தள்ளி போனதற்கான காரணத்தை கூறியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய கணவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி, அணைத்து பெண்களை மதிக்க வேண்டும்,  கொஞ்சம் குழந்தைத்தனமான மனநிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சாய் பல்லவி
சிவகார்த்திகேயன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved