உத்தரப்பிரதேச மாநில போலீசாருக்கான செல்போன் ஆப்ளிகேஷனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் விவரங்கள் சரிபார்ப்பு மற்றும் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்ய பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட UPCOP எனும் செல்போன் அப்ளிகேஷனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் தங்க விரும்பும் வாடகைதாரர்களின் விவரங்கள் சரிபார்ப்பை முதன்மை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட UPCOP அப்ளிகேஷனில் உள்ள ட்ராப்டவுன் பாக்ஸில் இடம்பெற்றுள்ள தொழில்களில் வாடகைக் கொலையாளி, கடத்தல்காரர், விபசாரி, போதைப்பொருள் கடத்தல்காரர் போன்ற தொழில்கள் இடம்பெற்றுள்ளன. 

Scroll to load tweet…

இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்களை நெட்டிசன்கள் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள உத்தரப்பிரதேச காவல்துறை தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) முதன்மை தரவை அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

பிற மாநிலங்களும் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில காவல்துறை, இதைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி எனவும், இந்த சிக்கல் சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடம் சூட்டிக்காட்டப்பட்டுள்ளது, இதனை சரி செய்ய நாங்கள் முயற்சித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்களின் விவரங்களை சரி பார்ப்பதை தவிர, தொழிலாளர்கள் மற்றும் வீட்டு உதவியாளர் விவரங்களையும் சரிபார்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவிலும் 50% பரம்பரை வரி.. காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக பதிலடி..

இதுகுறித்து அம்மாநில மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், “வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்களின் விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் சரிபார்ப்பதற்காக UPCOP அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள தரவுகள் தேசிய குற்றப்பதிவு பணியகத்தை அடிப்படையாக கொண்டது.” என தெரிவித்துள்ளார்.