நடிகை ரச்சித்தா மகாலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு,  அவர் நடித்துள்ள 'ஃபயர்' படத்தில் இருந்து, கிலிம்ஸி வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது படக்குழு. 

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரச்சித்தா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரியான பட வாய்ப்புகள் அமையாத நிலையில் 'பிக் பாஸ் நிகழ்ச்சி யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்குமே தவிர, பட வாய்ப்புகளை பெற்று தராது என்பதை ஓப்பனாகவே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரது விவாகரத்து சர்ச்சை ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, வெள்ளித்திரையில் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். ஜே எஸ் கே இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரச்சித்தா மகாலட்சுமி ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் இந்த அப்படத்தில், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி, பேட்மேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பாக்கிய லட்சுமி சீரியல் அமிதாவா இது? அடேங்கப்பா சும்மா பாலிவுட் ஹீரோயின் போல் இருக்காங்களே! லேட்டஸ்ட் போட்டோஸ்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரச்சித்தா மகாலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் அவரது கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி நடித்துள்ளார் ரச்சித்தா மகாலட்சுமி.

Arun Vijay: உடலில் ஒட்டு துணியின்றி... ஆக்ரோஷமாக சண்டை போடும் அருண் விஜய்! வெளியானது 'ரெட்ட தல' போஸ்டர்!

இந்த வீடியோ சேலையில் சொட்ட சொட்ட நினைத்திருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி முட்டி வரை சேலையை தூக்கிக்கொண்டு மாடிக்கு செல்வது போலவும், பின்னர் சட்டை மட்டுமே அணிந்து அவர் வெளியே வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. அதே நேரம் ரச்சித்தா மகாலட்சுமியா இப்படி என சிலர் அதிர்ச்சி கேள்விகளையும் முன் வைத்து வருகிறார்கள். சதீஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சி எஸ் பிரேம்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தை ஜே எஸ் கே சதீஷ்குமார் சார்ப்பில் ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Fire - Glimpse of Rachitha as Meenakshi | Will Burn Soon In Theatres | JSK Prime Media