MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லவ் யூ லாட்ஸ் உயிரே.. தன் பெயரை கையில் பச்சை குத்திய ரசிகையை பார்த்து எமோஷ்னலான KPY பாலா! வெளியான புகைப்படம்!

லவ் யூ லாட்ஸ் உயிரே.. தன் பெயரை கையில் பச்சை குத்திய ரசிகையை பார்த்து எமோஷ்னலான KPY பாலா! வெளியான புகைப்படம்!

KPY பாலா தன்னுடைய சக்திக்கு மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து... ரசிகர்களின் அன்பை சம்பாதித்துள்ள நிலையில், தற்போது தன்னுடைய பெயரை கையில் பச்சை குத்திகொண்டுள்ள ரசிகையின் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 28 2024, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
KPY Bala

KPY Bala

விஜய் டிவி தொலைக்காட்சி, பல திறமையாளர்களை திரையுலகிற்கு கொடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' சீசன் 6 என்கிற ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற தான் KPY பாலா.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதைத் தொடர்ந்து இவருக்கு இருக்கும் திறமையை கண்டு விஜய் டிவி அடுத்தடுத்த வாய்ப்புகளை இவருக்கு அல்லி கொடுத்தது. குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு, டைமிங் காமெடியால், பல ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வாய்த்த பாலா பின்னர், ஒரு தொகுப்பாளராகவும் தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

நடிகை இனியாவா இது? புது தொழிலில் இறங்கியதும் இப்படி கொழுக்கு மொழுக்குன்னு மாறிட்டாங்களே! ரீசென்ட் போட்டோஸ்!

37

இவரின் திறமை, சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரை இயக்குநர்களாலும் கவனிக்கப்பட்ட நிலையில், தற்போது பல முன்னணி நடிகர்களுடன், லீடு காமெடி ரோலில் நடித்து வருகிறார். அதே போல் மிகவும் இளம் வயது காமெடி நடிகர் என்பதால்... பல இளம் நடிகர்களின் படங்களில் ஹீரோவின் பிரென்ட் ரோலில் நடித்து வருகிறார். கிட்ட தட்ட இவரின் காமெடி மற்றும் டைமிங் காமெடி நடிகர் சந்தனத்தையும், விவேக்கையும் நினைவு படுத்துகிறது.
 

47
kpy bala

kpy bala

பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி... மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய பெற்றோர், குடும்பத்திற்கு சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை... ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார். 

Vijay Tv Bhavana : அழகிலும்.. ஸ்டைலிலும் ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா!
 

57
KPY Bala

KPY Bala

இதுவரை மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கிலும், ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கிலும், 4 ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ள பாலா, மழை வெள்ளம் சென்னை பகுதியை சூழ்ந்த போது , தன் கையில் இருந்த மொத்த பணத்தையும்... ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார். தன்னுடைய அம்மா சேமிப்பிராக சீட்டு போட்டு வைத்திருந்த பணத்தையும் எடுத்து செலவு செய்து, பலருக்கு உணவளித்தார்.
 

67
KPY Bala

KPY Bala

பாலாவின் இந்த உதவும் பக்கத்தை பார்த்து, உண்மையில் நீங்கள் தான் ரியல் ஹீரோ என பல ரசிகர்கள் இவரை கொண்டனர். இந்நிலையில் 40 வயது மதிக்க தக்க, பெண் ஒருவர் KPY  பாலாவின் தீவிர ரசிகையாக மாறி, அவரின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார். 

கர்ப்பமாக இருக்கும் நிலையில் குட்டை டவுசரில் பாறை மீது அமர்ந்து யோகா செய்யும் அமலா பால்! வைரலாகும் வீடியோ.!
 

77

அந்த பெண் எதார்த்தமாக KPY பாலாவை சந்தித்த போது தன்னுடைய கையை காட்ட, மிகவும் எமோஷ்னல் ஆன அவர், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு, உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளதாவது, "நான் சமீபத்தில் ஒரு அதிசய பெண்ணை பார்த்தேன். அவர் தன்னுடைய கைகளில் என்னுடைய பெயரை டாட்டூ போட்டிருந்தார். நான் இதற்க்கு தகுதியானவனா என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. உங்களை அதிகம் மதிக்கிறேன். மிகவும் நன்றி லவ் யூ ஸ்வீட் ஹார்ட். மிகவும் எமோஷ்னலாக உணர்கிறேன். மீண்டும் சொல்கிறேன் லவ் யு லாட்ஸ் உயிரே... என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved