MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நடிகை இனியாவா இது? புது தொழிலில் இறங்கியதும் இப்படி கொழுக்கு மொழுக்குன்னு மாறிட்டாங்களே! ரீசென்ட் போட்டோஸ்!

நடிகை இனியாவா இது? புது தொழிலில் இறங்கியதும் இப்படி கொழுக்கு மொழுக்குன்னு மாறிட்டாங்களே! ரீசென்ட் போட்டோஸ்!

மலையாள நடிகையான இனியா, சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காரணம் இதில் செம்ம குண்டாக உள்ளார் நடிகை இனியா. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 28 2024, 07:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மலையாள படங்களில் அறிமுகமான நடிகை இனியா, தமிழில் நடிகர் விமலுக்கு ஜோடியாக 'வாகை சூடவா' என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இயக்குனர் சற்குணம் இயக்கிய இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு உட்பட பல விருதுகளை பெற்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

முதல் தமிழ் படத்திலேயே தமிழ் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட இனியா, இதை தொடர்ந்து... அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.

Vijay Tv Bhavana : அழகிலும்.. ஸ்டைலிலும் ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா!

36

தமிழ் - மலையாளம் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார் இனியா. சமீப காலமாக இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் 'நான் கடவுள் இல்லை' என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது.

46

இந்நிலையில் கடந்த ஆண்டு நடிப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து, நடிகை இனியா அனோரா ஆர்ட் ஸ்டூடியோ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இதில் பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் கொண்ட நிறுவனமாக இயக்கி வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் நிலையில் குட்டை டவுசரில் பாறை மீது அமர்ந்து யோகா செய்யும் அமலா பால்! வைரலாகும் வீடியோ.!

56

தன்னுடைய நிறுவனத்தில் முழு கவனம் செலுத்தி வரும் இனியா... சமீபத்தில், தன்னுடைய பிறந்தநாளை, இந்த நிறுவனத்தின் முதலாம் ஆண்டு ஆனிவர்சரியையும் ஒரே நாளில் கொண்டாடினார். 

66

இந்த நிகழ்ச்சியில், இனியாவின் நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இனியா கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்து... 'வாகை சூடவா' படத்தில் நடித்த இனியாவா இது என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விவாகரத்தான ஒரே வருடத்தில் மறுமணம் செய்யபோவதை உறுதி செய்த மெகா ஸ்டார் மகள் நிஹாரிகா! திருமணம் எப்போது?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved