GK VASAN : தமாகா நிர்வாகிகளை தட்டித் தூக்கிய எடப்பாடி... அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவரால் ஜி.கே வாசன் ஷாக்
அதிமுக கூட்டணியில் இருந்து வெளயேறி பாஜகவுடன் ஜி.கே.வாசன் கூட்டணி வைத்த நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்,
எடப்பாடி- ஜி.கே.வாசன்
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஜி. கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக இடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் இடம்பெற்றிருந்த ஜிகே வாசன் எந்த கூட்டணியோடு செல்வது என்று ஒரு குழப்பமான நிலையில் இருந்தார். இதனையடுத்து அதிமுக பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையும் மீண்டும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசன்
ஆனால் அதிமுக தரப்பு ஜி கே வாசனின் பேச்சு வார்த்தைக்கு எந்தவித ஒப்புதலும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்று இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கும் மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தை கொண்ட ஜிகே வாசன் பாஜக உடன் நேரடியாக கூட்டணி வைத்ததை விரும்பாத அந்த கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து அந்த கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ஒரு சிலர் அதிமுக மற்றும் திமுகவிலும் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர்
இந்த நிலையில் ஜி கே வாசனுக்கு ஷாக்க் கொடுக்கும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை K. பூபதி, மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் மயிலாப்பூர் பகுதி தலைவர் K.கோபிநாதன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.