MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சமந்தாவின் மாஜி கணவர் நாகசைதன்யா உடன் டேட்டிங் சென்றாரா சோபிதா? ஒரே போட்டோவால் மீண்டும் கிளம்பிய காதல் சர்ச்சை

சமந்தாவின் மாஜி கணவர் நாகசைதன்யா உடன் டேட்டிங் சென்றாரா சோபிதா? ஒரே போட்டோவால் மீண்டும் கிளம்பிய காதல் சர்ச்சை

நடிகை சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2024, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. அவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜாலியாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. நாக சைதன்யா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் நடிகை சமந்தா. விவாகரத்துக்கு பின்னர் இருவருமே மறுமணம் செய்துகொள்ளவில்லை.

24

சோபிதா நாக சைதன்யா காதல் சர்ச்சை

இருப்பினும் நடிகர் நாக சைதன்யா பற்றிய காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலாவை அவர் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கடந்த ஆண்டே செய்திகள் உலா வந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக லண்டனில் இருவரும் உணவகம் ஒன்றில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது.

இதையும் படியுங்கள்... மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை காதலித்து கரம்பிடித்தார் அபர்ணா தாஸ்... கோவிலில் சிம்பிளாக நடந்து முடிந்த திருமணம்

34

சுற்றுலா சென்ற நாக சைதன்யா

பின்னர் நாளடைவில் அந்த விவகாரம் சைலண்ட ஆன நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஜோடியாக காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். நாக சைதன்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். ஜீப்பில் செல்வது போன்று இருக்கும் அந்த புகைப்படத்திற்கு நடிகை சோபிதா துலிபாலா லைக்கையும் போட்டிருந்தார். அது ஒருபுறம் இருக்க நடிகை சோபிதா பதிவிட்ட புகைப்படத்தால் தான் இந்த காதல் சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது.

44

சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

சோபிதா ஜீப்பில் சவாரி செய்யும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இருவர் பதிவிட்ட புகைப்படங்களிலும் பின்னணியில் உள்ள இடம் ஒன்றாக இருந்ததால் சந்தேகம் அடைந்த நெட்டிசன்கள், இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்றுள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இருவருமே அந்த புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டது என்கிற விவரத்தை வெளியிடவில்லை. அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இதுபோன்று ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Dhanush : நீயெல்லாம் ஒரு மனுஷனா... உனக்கு எதுக்கு பல பெண்களோட வாழ்க்கை? தனுஷை டார் டாராக கிழித்த பிரபலம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நாக சைதன்யா
சோபிதா துலிபாலா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved