'துணிவு' பட வெற்றி.. சம்பளத்தை பல கோடியாக உயர்த்திய அஜித்! 'விடாமுயற்சி'-க்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?
'விடாமுயற்சி' படத்தில் நடிக்க, துணிவு படத்தை விட பல கோடி அதிகமாக அஜித் சம்பளம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Thala Ajith House
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படத்தை, போனி கபூர் மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்தார்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம், சுமார் 200 கோடி பட்ஜட்டில் எடுக்கப்பட்ட நிலையில், 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் நடிக்க அஜித்துக்கு சுமார் 70 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.
இந்த படத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் போதே அவருடைய 62-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், அவரின் கதை சொதப்பல்களால், இப்படம் அவர் கையில் இருந்து நழுவியது. இதன் பின்னர் அஜித்தின் படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ள தகவல் உறுதி செய்யப்பட்டது மட்டும் இன்றி இந்த படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதையும் அறிவித்தனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா கமிட் ஆகி உள்ளார். விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அஜித்தின் வலிமை, துணிவு ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் விடாமுயற்சி படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். அக்டோபர் 4-ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பையான் நாட்டில் ஆரம்பமானது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ... இந்த படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தில் நடிக்க, அஜித்து 105 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். இது, துணிவு படத்திற்கு இவர் பெற்ற சம்பளத்தை விட 35 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D