அப்போ இல்ல.. இல்லனு சொன்னதெல்லாம் உருட்டா? ரவீனாவை காதலிக்கும் மேட்டரை பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் செய்த மணி!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரவீனா மற்றும் மணி இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே சில தகவலைகள் பரவி வந்த நிலையில், தற்போது மணி ஓப்பனாக உண்மையை கூறியுள்ளார்.
Bigg Boss love Jodi
பிக்பாஸ் நிகழ்ச்சியில், கண்டெடுக்கக பல பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் நடந்தாலும், லவ் கான்செப்டுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி இந்த முறை யார் காதல் ஜோடிகளாக மாறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
Raveena Mani Relationship:
இந்த சந்தேகத்துக்கு தீனி போடும் விதமாக, ரவீனாவின் இன்ஸ்டா பேஜை அலசி ஆராய்ந்ததில்... டான்ஸ் பிரபலமான மணியும் - ரவீனாவும் ஏற்கனவே நன்கு பழக்கமானவர்கள் என்பது தெரியவந்தது. அதே போல் இருவரும், வெளிநாடுகளுக்கு, சுற்றுலா சென்று ரொமான்டிக் பாடல்களுக்கு ரீலிஸ் செய்து வெளியிட்டதால், இருவரும் காதலிக்கிறார்களா? என்கிற சந்தேகமும் எழுந்தது.
Raveena Mother Clarify:
இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக, ரவீனாவின் அம்மா... மணி மற்றும் ரவீனா இருவரும் பல வருடங்களாகவே நல்ல நண்பர்கள் என தெரிவிதித்தார். இதை தொடர்ந்து மணி - ரவீனா இருவரும் பிக்பாஸ் வீட்டில் நட்பை தாண்டி, காதலர்கள் போல் சுற்றி வந்தது... பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
Bigg boss season 7 lovers:
இதனை விசித்ரா, ஐஷு, பிரதீப் ஆகியோர் நேரடியாக கேட்டு விட்டாலும்... மற்றவர்கள் பின்னால் பேசிக்கொள்கிறார்கள். எல்லோரும் கேட்ட போது, நாங்கள் காதலர்கள் இல்லை, நண்பர்கள் தான் என்றும், இதுவரை நாங்க காதலிப்பது குறித்து யோசிக்கவில்லை, நீங்களே பேசி காதலை வரவெச்சுடுவீங்க என செம்ம உருட்டு உருட்டி வந்தனர்.
Mani Confirmed Love:
ஆனால் தற்போது ஐஷு துருவி துருவி மணியிடம்... ரவீனா உடன் உள்ள உறவு குறித்து கேட்க, தன்னுடைய தோழி கேட்பதால் வேறு வழியின்று காதலிக்கும் தகவலை கூறி உள்ளார். இதுபற்றி ரவீனாவிடம், உன்னை கேட்காமல் நான் ஐஷுவிடம் கூறி விட்டேன் என சொல்ல, அவர் செம்ம டென்க்ஷன் ஆகிறார்.
Raveena Angry Face show to Mani:
ஃபர்சனல் பற்றி யாரிடமும் சொல்லாதே என கூறியும் ஏன் சொன்ன, உங்க வீடு மாதிரி இல்ல எங்க வீடு என ரவீனா ஒருவித பயத்துடன் கூறுகிறார். இதன் மூலம் மணி - ரவீனா இருவரும் காதலித்து வருவது உறுதியாகியுள்ளது. தன்னுடைய மகள் யாரையும் காதலிக்கவில்லை என கூறிய ரவீனாவின் அம்மாவுக்கே இந்த தகவல் செம்ம ஷாக்காக இருக்கும் என தெரிகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Mani - Raveena ready to give Love Concept:
மணி - ரவீனா இருவரும் இனிவரும் நாட்களில் காதல் கண்டெண்ட் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பக்காடுகிறது. எனினும் இவர்கள் காதல் ஓவியா - ஆரவ், கவின் - லாஸ்லியா, அளவுக்கு பேசப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.