MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரஷீத் கான் கேப்டன் – டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இளம் ஆப்கானிஸ்தான் அறிவிப்பு!

ரஷீத் கான் கேப்டன் – டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இளம் ஆப்கானிஸ்தான் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை தொடருககான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு 25 வயது நிரம்பிய ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 01 2024, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Afghanistan

Afghanistan

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

27
Afghanistan T20 World Cup 2024 Squad

Afghanistan T20 World Cup 2024 Squad

ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை 2024:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், அஸ்மாதுல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரன், முகமது இசாக், முகமது நபி, குல்புதீன் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நாங்க்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹாக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அகமது மாலிக்.

ரிசர்வ் பிளேயர்ஸ்: சேதிக் அடல், ஹஸ்ரத்துல்லா சசாய், சலீம் சஃபீ.

37
Afghanistan T20 World Cup 2024 Squad

Afghanistan T20 World Cup 2024 Squad

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவில் ரஷீத் கான், நவீன் உல் ஹாக், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.

47
Afghanistan T20 World Cup 2024 Squad

Afghanistan T20 World Cup 2024 Squad

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம் பெறவில்லை. 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றது. ஆனால், அந்த தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று 2012 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

57
Afghanistan T20 World Cup 2024 Squad

Afghanistan T20 World Cup 2024 Squad

2014 ஆம் ஆண்டும் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று வெளியேறியது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அதில், விளையாடிய 4 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

67
Afghanistan T20 World Cup 2024 Squad

Afghanistan T20 World Cup 2024 Squad

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் விளையாடிய 5 போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

77
Afghanistan T20 World Cup 2024 Squad

Afghanistan T20 World Cup 2024 Squad

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 8ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் விளையாடிய 5 போட்டியிலும் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த நிலையில் தான் தற்போது வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஆப்கானிஸ்தான்
மிட்செல் மார்ஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved