தேர்தல் நேரம்.. பறிமுதல் செய்யப்பட்ட 8,889 கோடி.. பெரும்பங்கு போதைப்பொருள் தான் - தேர்தல் ஆணையம் பகீர் Report!
Election Commission : இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், ஐந்தாம் கட்ட பிரசாரம் இப்பொது நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் குறித்த புதிய புள்ளிவிவரங்கள் மற்றும் விரிவான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் இப்பொது வெளியிட்டுள்ளது. ECI என்று அழைக்கப்படும் இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட தொகை விரைவில் ரூ. 9000 கோடிகளை எட்டும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே ரூ. 8,889.74 கோடி. தேர்தல் ஆணையம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. "தற்போதைய மக்களவைத் தேர்தலில் பணபலம் மற்றும் தூண்டுதல்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதலின் விளைவாக, ரூ. 8889.74 கோடி மதிப்பிலான இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Loksabha Election 2024 முதல் நான்கு கட்டங்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்!
மேலும் இதில் அதிகபட்சமாக சுமார் 3958 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது பறிமுதல் செய்யப்பட்ட 8,889 கோடி ரூபாயில் சுமார் 45 சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆய்வுகள், மாவட்டங்கள் மற்றும் ஏஜென்சிகளின் செலவின கண்காணிப்பு ஆகியவை மார்ச் 1 முதல் முடுக்கிவிடப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களை குறித்து அதிக கவனத்துடன் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முன்னதாக, மறுஆய்வுப் பயணத்தின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நோடல் ஏஜென்சிகளிடம் உரையாற்றி அப்போது, "போதைப்பொருளின் தாக்கத்தால் வரும் அழுக்கு நிறைந்த பணத்தை தடுக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறினார்.
தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, ரூ. 8889 கோடிகளில், ரொக்கப் பறிமுதல் வெறும் ரூ. 849.15 கோடி தான். மொத்தம் 814 கோடி ரூபாய் மதிப்பிலான, 5.39 கோடி லிட்டர் மதுபானம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1260.33 கோடி ரூபாய் மதிப்பிலான உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச பொருட்கள் என்ற ரீதியில் 2006.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக குஜராத்தில் ரூ. 1461.73 கோடி அளவில் மிகப்பெரிய பறிமுதல்கள் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் ரூ. 1133.82 கோடியும் மற்றும் பஞ்சாபில் ரூ. 734.54 கோடியம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 ஆண்டுகால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இதுவே அளவிலான பரிமுதல்களாகும்.
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தொடர்ந்து 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்..