லியோவை டீலில் விட்டு... தீபாவளி ரிலீஸ் படத்தை கொத்தாக தூக்கிய ரெட் ஜெயண்ட்ஸ் - மாஸ் சம்பவம் லோடிங்
தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் பிரபல நடிகரின் படத்துடைய தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
red giant movies
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது ரெட் ஜெயண்ட் மூவீஸ். உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்த இந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி திரைப்படங்களின் திரையரங்க உரிமையை வாங்கி ரிலீஸ் செய்வதிலும் முதன்மையாக உள்ளது. குறிப்பாக திமுக கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.
vijay, udhayanidhi
உதயநிதியின் கண்ட்ரோலில் இருந்தவரை வாரத்திற்கு ஒரு படமாவது ரெட் ஜெயண்ட்ஸ் மூலம் வெளியாகும் என்கிற நிலை தான் இருந்தது. ஆனால் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ரெட் ஜெயண்ட்டை தன் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டார். இதனால் மாதம் ஒரு படம் என்கிற கணக்கில் தான் சமீபகாலமாக அவர்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். கடைசியாக ரெட் ஜெயண்ட் வெளியிட்ட திரைப்படம் சித்தா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Udhayanidhi
இதையடுத்து இம்மாதம் வெளியாகும் லியோ படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் தட்டிதூக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடியோ லாஞ்ச் ரத்தானதற்கு ரெட் ஜெயண்டுக்கு ரிலீஸ் உரிமையை வழங்காதது தான் காரணம் என பேச்சு அடிபட்டதால், எதுக்கும் வம்பு என அந்த போட்டியில் இருந்து விலகிவிட்டது ரெட் ஜெயண்ட்ஸ். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினியின் லால் சலாம் படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றி உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
Jigarthanda double X
அப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அதனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரெட் ஜெயண்ட் கைவசம் எந்தபடமும் இல்லையா என பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது தீபாவளி ரேஸில் கெத்தாக எண்ட்ரி கொடுத்துள்ளது ரெட் ஜெயண்ட்ஸ். தீபாவளிக்கு ரிலீசாகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் தட்டி தூக்கி உள்ளது. இதற்கான அறிவிப்பும் இன்று வெளியாக இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ படத்தின் ப்ரீமியர் காட்சிகள்... காரணம் என்ன?