அமெரிக்காவில் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ படத்தின் ப்ரீமியர் காட்சிகள்... காரணம் என்ன?
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்தின் ஐமேக்ஸ் வெர்ஷன் பிரீமியர் ஷோக்கள் அமெரிக்காவில் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன.
Leo Vijay
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சி உள்ளதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. லியோ திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக பிரம்மாண்டமக ரிலீஸ் செய்யப்பட்ட உள்ளது.
Leo Advance Booking
லியோ படத்திற்கான முன்பதிவு வெளிநாடுகளில் கடந்த மாதமே தொடங்கிவிட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் இப்படத்திற்கான முன்பதிவு 6 வாரங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அதேபோல் விஜய்க்கு அதிகளவிலான ரசிகர் கூட்டம் உள்ள அமெரிக்காவிலும் லியோ பட முன்பதிவு கடந்த சில வாரங்களாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரிலீஸ் நெருங்கும் வேளையில் லியோ பட ப்ரீமியர் காட்சிகள் அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Leo Premiere shows cancelled
லியோ படத்தின் ப்ரீமியர் காட்சி அமெரிக்காவில் வருகிற அக்டோபர் 18-ந் தேதியே திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது லியோ ஐமேக்ஸ் வெர்ஷனுக்கான ப்ரீமியர் காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. படம் அனுப்ப தாமதம் ஆனதன் காரணமாகவே அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட இருந்த ப்ரீமியர் காட்சிகளை ரத்து செய்துள்ளனர். அதற்காக டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Leo IMAX version
இருப்பினும் ஐமேக்ஸ் அல்லாத திரையரங்குகளில் லியோ திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் இன்னும் முன்பதிவே தொடங்கப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இந்த பக்கம் டிடிஎப்... அந்த பக்கம் செந்தில் பாலாஜி - சிறையில் ஸ்பெஷல் கவனிப்பா? - ரவீந்தரின் புழல் சீக்ரெட்ஸ்