பாக்ஸ் ஆபிஸின் ‘பாகுபலி’யாக வலம் வரும் இயக்குனர் ராஜமவுலியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?
இயக்குனர் ராஜமவுலி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
SS Rajamouli
பிரபல திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் மகனான ராஜமவுலி, தன் தந்தையை போல் சினிமாவின் மீது தீரா காதல் கொண்டிருந்தார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ரமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு ராஜமவுலியின் முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் நம்பர் 1 ரிலீஸ் ஆனது. ஜூனியர் நடிப்பில் வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து சிம்ஹாத்ரி, பிரபாஸ் நடித்த சத்ரபதி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தார் ராஜமவுலி.
Director Rajamouli
இயக்குனர் ராஜமவுலியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது மகதீரா தான். ராம்சரண், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் தெலுங்கு மட்டுமின்றி பிற மொழிகளிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதையடுத்து அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் பேசப்பட்டன. அதில் கற்பனையின் உச்சமாக ஈ-யை வைத்து இவர் இயக்கிய நான் ஈ என்கிற ஆக்ஷன் திரைப்படம் வேறலெவல் ஹிட் அடித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Director Rajamouli Birthday
பின்னர் பாகுபலி என்கிற வரலாற்று படத்தை எடுத்து பாலிவுட்டுக்கே வசூலில் சவால்விட்டார் ராஜமவுலி. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதையடுத்து ஆர்.ஆர்.ஆர் என்கிற வரலாற்று படத்தை இயக்கி, இந்தியாவிற்கு எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கரையும் தட்டி வந்தார். இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்தது.
Director Rajamouli net worth
தற்போது ஹாலிவுட்டே வியந்து பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ள ராஜமவுலி, இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ராஜமவுலிக்கு மொத்தமே ரூ.158 கோடி சொத்துக்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பலகோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களா ஒன்றையும் கட்டி உள்ளார் ராஜமவுலி.
Director Rajamouli next film
ராஜமவுலியிடம் பி.எம்.டபிள்யூ, ரேஞ்ச் ரோவர் போன்ற சொகுசு கார்களும் உள்ளன. ராஜமவுலி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன்மூலமும் நன்கு லாபம் பார்த்து வரும் இவர், ரியல் எஸ்ட்டேட்டிலும் முதலீடு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்... தாமிரபரணி நாயகனின் தாராள மனசு... தூத்துக்குடி அருகே ஒட்டுமொத்த கிராமத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்கிய விஷால்