இயக்குனர் ஹரியின் மனைவியா இது... நவராத்திரி கொண்டாடிய ப்ரீத்தாவின் பியூட்டிபுல் போட்டோஸ் இதோ
இயக்குனர் ஹரியின் மனைவி ப்ரீத்தா விஜயக்குமார் தனது வீட்டில் தோழிகளுடன் சேர்ந்து நவராத்திரி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Preetha hari
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர் தான் ப்ரீத்தா. நடிகை வனிதாவின் உடன் பிறந்த சகோதரியான இவர், சினிமாவில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ப்ரீத்தா விஜயகுமார் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Preetha hari navaratri celebration
இவருக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் ஆனது. தமிழ் சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வரும் ஹரியை தான் ப்ரீத்தா திருமணம் செய்துகொண்டார். ஹரி - ப்ரீத்தா ஜோடிக்கு 3 பிள்ளைகளும் உள்ளன. இவர்களுக்கு சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றும் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஸ்டூடியோவை சூர்யா தான் திறந்து வைத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Preetha hari navaratri photos
இயக்குனர் ஹரி தற்போது விஷாலின் 34-வது படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே விஷால் உடன் தாமிரபரணி, பூஜை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ஹரி - விஷால் கூட்டணி. தற்போது ஹாட்ரிக் வெற்றிக்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த நிலையில் நடிகை ப்ரீத்தாவின் நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Director hari wife Preetha
நடிகை ப்ரீத்தா தன் வீட்டில் நவராத்திரிக்காக கொலு வைத்து வழிபாடு நடத்தி உள்ளார். இதில் ப்ரீத்தாவின் தோழிகளும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை ப்ரீத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Preetha vijayakumar navaratri photos
ப்ரீத்தாவின் அக்கா அனிதா விஜயகுமாரும் தினசரி நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திவர, மறுபுறம் ப்ரீத்தாவும் தற்போது நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளதால் சோசியல் மீடியா பக்கம் சென்றாலே விஜயகுமார் பேமிலியின் புகைப்படங்கள் தான் வரிசைகட்டி வருகின்றன.
இதையும் படியுங்கள்... பர்த்டே பார்ட்டி வைத்த கீர்த்தி சுரேஷ்... படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்கள் - வைரலாகும் போட்டோஸ்