பர்த்டே பார்ட்டி வைத்த கீர்த்தி சுரேஷ்... படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்கள் - வைரலாகும் போட்டோஸ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது 31-வது பிறந்தநாளை ஒட்டி, பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
keerthy suresh birthday party
கோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் இவர் நடிப்பில் சைரன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து ரகுதாதா மற்றும் ரிவால்வர் ரீட்டா என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களாகும்.
keerthy suresh
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். அங்கு அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
keerthy suresh birthday celebration
இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ், நேற்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களும் குவிந்தன. இந்த நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
celebrities at keerthy suresh birthday party
கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் நடிகைகள் பிரீத்தா, கல்யாணி பிரியதர்ஷன், பிரியா அட்லீ, நடிகர் கதிர், லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ், இயக்குனர் அட்லீ மற்றும் அவரது திரையுலக நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த குரூப் போட்டோ தான் இது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
keerthy suresh with atlee and priya
கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நணபர்களான இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கீர்த்தி சுரேஷ் பர்த்டே பார்ட்டியில் எடுத்த கியூட் செல்பி புகைப்படம் இது.
keerthy suresh, kathir
பரியேறும் பெருமாள், மதயானை கூட்டம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் கதிரும் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டார்.
keerthy suresh with priya atlee
பர்த்டே பேபி கீர்த்தி சுரேஷ் உடன் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா எடுத்த பியூட்டிபுல் செல்பி புகைப்படம் தான் இது.
keerthy suresh with Preeti
நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவின் மனைவியும், சீரியல் நடிகையுமான பிரீத்தி, கீர்த்தி சுரேஷ் பர்த்டே பார்ட்டியில் எடுத்த செல்பி போட்டோ தான் இது.
இதையும் படியுங்கள்... 31 வயசுலேயே இம்புட்டு சொத்தா... நல்ல வெயிட் பார்ட்டியா மாறிய கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?