திருமணமான பாலிவுட் நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய போகும் தனுஷ்! சுட சுட வெளியான அப்டேட்.!
10 வருடங்களுக்கு பின் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் தனுஷ், கோலிவுட்டை தாண்டி... டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எந்த நடிகரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியவர். உலக அளவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் தனுஷுடன் அடுத்ததாக ஜோடி சேர உள்ள கதாநாயகி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான விவாகரத்துக்கு பின்னர், திரையுலகில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் தனுஷ். அந்த வகையில் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான 'வாத்தி' திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்று கதைக்களத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என கூறப்படும் நிலையில், இதுகுறித்து எந்த வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ரைட்டு விடு... ஒரே வார்த்தையில் ஓவராய் பேசிய குணசேகரனை அடக்கிய அப்பத்தா! எதிர்நீச்சல் அப்டேட்!
இதை தொடர்ந்து, சமீபத்தில் தனுஷ் 'ராஞ்சனா' பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்தார். இந்த அறிவிப்பை, ராஞ்சனா திரைப்படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிறது என்கிற தகவலை வெளியிட்டு, ஒரு சகாப்தத்திற்கு பின் ராஞ்சனாவின் உலகில் இருந்து மற்றொரு கதை, "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). என மீண்டும் பாலிவுட் நாயகனாக மாறுவதை உறுதி செய்தார்.
தற்போது இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தான் நடிக்க உள்ளாராம். கடந்த ஆண்டு கியாரா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே தனுஷுடன் நடித்து வருகிறது. வடசென்னை கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.