MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமணத்திற்கு முன்பே வரலட்சுமி பெயரில் மும்பையில் சொந்த வீடு! நிக்கோலாய் பற்றிய பல தகவல்களை பகிர்ந்த வரு!

திருமணத்திற்கு முன்பே வரலட்சுமி பெயரில் மும்பையில் சொந்த வீடு! நிக்கோலாய் பற்றிய பல தகவல்களை பகிர்ந்த வரு!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய காதல் கணவர் குறித்தும்... திருமணத்துக்கு முன்பே சொந்த வீடு ஒன்றை மும்பையில் வாங்கி உள்ளது குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : May 01 2024, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபல நடிகர் சரத்குமாரை தொடர்ந்து அவருடைய குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிகையாக  அறிமுகமானவர் தான் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'போடா போடி' படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்திய வரலட்சுமி, தன்னுடைய டான்ஸ் திறமையாலும் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார்.
 

26

எனினும் அடுத்தடுத்த தமிழ் படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் மனதை தளர விடாமல், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க துவங்கினார். ஒருவழியாக பிரபல நடிகை ஒருவரின் சிபாரிசால், இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்டை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமிக்கு கிடைத்தது. இந்த படமும் இவருக்கு தோல்வி முகமாகவே அமைந்தாலும், இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது.

'தல' அஜித்தின் பிறந்தநாளில்... அவர் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்! ஆச்சர்ய வீடியோ!
 

36

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், அழுத்தமான குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். எனவே பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லியாகும் வாய்ப்பையும் பெற்றார்.
 

46

தற்போது தன்னுடைய உடல் எடையை மளமளவென குறைத்து... ஸ்லிம் ஃபிட் நாயகியாக மாறியுள்ள வரு, திருமணத்திற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில் இவரின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து, விரைவில் தன்னுடைய காதலர் நிக்கோலாய் சச் தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

Shalini Ajith Gift: அஜித்தின் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த பைக்! இத்தனை லட்சமா? விலையே கேட்டாலே தலை சுத்துதே!
 

56

தன்னுடைய காதலர் பற்றி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், யாருக்கும் தெரியாத பல தகவல்களை கூறியுள்ளார் வரலட்சுமி. அதாவது தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நிகோலாயை... கடந்த 14 வருடங்களாகவே தனக்கு தெரியும் என்றும், அவ்வப்போது மெசேஜ் மூலம் பேசி கொள்வோமே தவிர, சந்தித்து கொள்ள மாட்டோம். 
 

66

பின்னர் தன்னுடைய அப்பா அனுமதியை பெற்று தான் நிக்கோலாய் நார்வே நாட்டில் வைத்து தனக்கு புரபோஸ் செய்த்தாகவும் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே தங்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.  மேலும் திருமணத்திற்கு முன்பே வரலட்சுமியின் வருங்கால கணவர் இருவரின் பெயரிலும் மும்பையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அண்மையில் இதுகுறித்த, வீடியோ ஒன்றையும் வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா வாங்கிய புதிய வீடு! எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved