டாடா முதல் ஜோ வரை.. இவ்வாண்டு பட்டையை கிளப்பிய அறிமுக இயக்குனர்கள் - கெத்து காட்டும் கோலிவுட் சினிமா!
Debutant Directors of Kollywood 2023 : இந்த 2023ம் ஆண்டில் பல அறிமுக இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் தரத்தை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூறினால் அது மிகையல்ல. அவர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Dada Movie
சினிமா என்பது பலருக்கு பொழுதுபோக்காக இருந்தாலும், பலர் அதை தங்கள் இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். அப்படி சினிமாவை இலக்காக கொண்டு செயலாற்றும் பலர் அதில் தோல்வியை தழுவினாலும், சிலர் அதில் வெற்றி கண்டு வருகின்றனர்.
அந்த வகையில் வெளியான பிரபல நடிகர் கவின் அவர்களின் டாடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான கணேஷ் பாபு தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். நேர்த்தியான கதை அம்சமும், வசனங்களுக்கும் அவரை ஒரு வெற்றி இயக்குனராக மாற்றியுள்ளது.
Ayothi Movie
பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியான "அயோத்தி" திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த திரைப்படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. நல்ல கருத்துக்களை தனது திரைப்படத்தில் கூறியதன் மூலம் இயக்குனராக அறிமுகமான மந்திரமூர்த்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுருக்கிறார்.
Good Night Movie
ஜெய் பீம் மற்றும் காலா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ஒரு பீல் குட் படமாக அமைந்தது தான் "குட் நைட்" திரைப்படம். மிக இயல்பான கதை அம்சமும், கதாபாத்திர தேர்வும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாற்றியது. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விநாயக் சந்திரசேகரன் அவர்களும் ஒரு வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Por Thozhil
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் பிரபல நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியாகி இவ்வாண்டின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாறிய "போர் தொழில்" திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் ராஜா ஒரு சிறந்த இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
Joe Movie
இந்த வரிசையில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் "ஜோ" திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளி திரையில் மின்னி வருகின்ற நடிகர் ரியோ ராஜ் அவர்களுடைய நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஹரிஹரன் ராம் அவர்களுக்கு இது முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.