Lollu Sabha Seshu: அடடா.. மறைந்த லொள்ளு சபா சேஷுவுக்கு இப்படி ஒரு ஆசையா? கடைசி வரை அது நிறைவேறாமலே போயிடுச்சே!
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆகி தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில நடித்து வந்த சேஷு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Lollu sabha seshu
விஜய் டிவியில் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானம், யோகிபாபு ஆகியோர் இந்நிகழ்ச்சியின் மூலம் தான் சினிமாவுக்கு வந்தனர். அதுமட்டுமின்றி ஏராளமான காமெடி நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு தந்த பெருமை லொள்ளு சபாவுக்கு உண்டு. அந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் சேஷு.
seshu passed away
சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேஷுவுக்கு சினிமாவில் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார் சந்தானம். சமீபத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் கூட சேஷுவின் கதாபாத்திரம் பெரியளவில் ரீச் ஆனது. அதில் அவரின் கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சேஷு நேற்று காலமானார்.
இதையும் படியுங்கள்... Manjummel Boys : ஓடிடியில் ஒரே நாளில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் மஞ்சும்மல் பாய்ஸ் & ஹனுமன் - ரிலீஸ் தேதி இதோ
seshu last wish
இவருக்கு கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த சேஷு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேஷுவின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அவரின் லொள்ளு சபா டீம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரை கண்கலங்க செய்தது.
seshu, kamalhaasan
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்த சேஷுவுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை ஒன்றும் இருந்துள்ளது. அது என்னவென்றால், கமல்ஹாசன் உடன் ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்பது தான். இதனை பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறி இருந்தார் சேஷு. ஆனால் கடைசி வரை அவரது அந்த ஆசை நிறைவேறாமலே போய் விட்டது. காமெடி நடிகர் சேஷுவின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... 'ராஜா ராணி' படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? மிஸ் பண்ணிட்டு புலம்பிய நடிகை!