வாரிசு அரசியல்: திறமை இருந்தா தான் ஜெயிக்க முடியும்.. டிவிஎஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் திகழ்கின்றனர். வாரிசு என்றதும், ஏதோ அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
CM MK STALIN
இன்று சென்னையில் நடைபெற்ற டிவிஎஸ் (TVS) நிறுவனர் சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
TVS Corporation
அப்போது பேசிய அவர், “டிவிஎஸ் என்ற மூன்றெழுத்து நிறுவனத்தை டிஎம்கே மூன்றெழுத்து தலைவராக வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். என் தந்தை என்பதைவிட நாம் தலைவராக போற்றக்கூடிய கலைஞருக்கும் இதுதான் நூற்றாண்டு. இன்றைக்கு லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் வந்தாலும் ஏழைகளுக்கு வாகனமாக இருந்தது டிவிஎஸ் 50 தான்.
TS Srinivasan Centenary Celebration
இன்று 80 நாடுகளில் டிவிஎஸ் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. டிவிஎஸ் நிறுவனம் போன்று அனைத்து நிறுவனங்களும் கிராமப்புறங்களுக்கு உதவ வேண்டும். டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் டமிழ்நாட்டில் உருவாக வேண்டும். வேனு சீனிவாசனை போன்ற பல தொழில் அதிபர்கள் நமக்கு தேவை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Chief Minister MK Stalin
இப்போது சிலர் குழந்தை திருமணத்தை பச்சையாக ஆதரித்தும், மறுமணம் செய்வதற்கு மந்திரம் சொல்லக்கூடாது என்ற காலக்கட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே முற்போக்காக சிந்தித்து தன் மகளுக்கு மறுமணம் செய்து வைத்தவர் டிவிஎஸ் சுந்தரம். வாரிசுகள் திறமைசாலிகளாய் இருந்தால் எதையும் சிறப்பாக செய்து காட்டலாம்.
TVS 50
அதற்கு அடையாளமாக டிவிஎஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என்று நான் சொல்வதால் அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். டிவிஎஸ் நிறுவனம் தலைமுறை தலைமுறையாக தொழிலில் புதுமையை புகுத்துகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசினார்.