- Home
- Gallery
- Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று எவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று எவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கிண்டி:
மணப்பாக்கம் பார்த்தசாரதி நகர், பலராமன் கார்டன், பட்டியா கார்டன், அம்பேத்கர் நகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
தண்டையார்பேட்டை:
டோல்கேட் வடக்கு டெர்மினல் சாலை, திடீர் நகர், சுடலை முத்து தெரு, தேசியன் நகர், நாகூரான் தோட்டம், மீன்பிடி துறைமுகம், எருசப்பா மேஸ்திரி தெரு, ஆவூர் முத்தையா தெரு, பி.பி.டி சாலை, மேட்டுத் தெரு, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.