MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அடுத்த 5 வருஷத்துக்கு கால்ஷீட் இல்ல... தனுஷ் அம்புட்டு பிசி..! அவர் கைவசம் இத்தனை படங்களா? முழு லிஸ்ட் இதோ

அடுத்த 5 வருஷத்துக்கு கால்ஷீட் இல்ல... தனுஷ் அம்புட்டு பிசி..! அவர் கைவசம் இத்தனை படங்களா? முழு லிஸ்ட் இதோ

நடிகர் தனுஷ் தான் தற்போது இந்தியாவிலேயே மிகவும் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் கைவசம் உள்ள படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 17 2023, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Captain Miller

Captain Miller

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நடிகர் தனுஷ், தற்போது தன்னுடைய நடிப்பு திறமையால் ஹாலிவுட் வரை சென்று கலக்கிவிட்டார். இவருக்கு தற்போது கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் செம்ம பிசியான நடிகராக வலம் வரும் தனுஷின் லைன் அப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
Dhanush next movie

Dhanush next movie

தனுஷ் நடித்து முடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து தனுஷ் தனது 50-வது படத்திலும் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷே இயக்கியும் உள்ளார். இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

35
Dhanush upcoming movies

Dhanush upcoming movies

இதையடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி தனது அக்கா மகன் வருணை நாயகனாக வைத்து ஒரு படத்தையும் இயக்க தயாராகி வருகிறார். அப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டு உள்ளது. இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் தனுஷ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

45
Director dhanush

Director dhanush

அப்படியே டோலிவுட் பக்கம் சென்றால், அங்கு தேசிய விருது வென்ற இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அப்படியே பாலிவுட் பக்கம் போனால் அங்கு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெயின் என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் தனுஷ்.

55
Dhanush lineup

Dhanush lineup

மேற்கண்ட படங்களெல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. இதுதவிர அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சில படங்களும் உள்ளன. அதில் வெற்றிமாறனின் வட சென்னை 2, எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் இயக்கும் படம், பியார் பிரேமா காதல் பட டைரக்டர் இளன் இயக்கத்தில் ஒரு படம் என கிட்டத்தட்ட டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இவையெல்லாம் நடித்து முடிக்கவே அவருக்கு 5 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... ஸ்கூல் பையனாக மாறிய SK... கமல் படத்திற்காக மீண்டும் ரெமோ லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் போட்டோஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved