இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்... பிக்பாஸ் வீட்டில் இருந்து அவுட் ஆகப்போகும் 2 விக்கெட் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க உள்ளதாகவும், அதில் யார் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
maya, Poornima
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பிரதீப் வெளியேறிய பின்னர் டல் அடிக்க தொடங்கி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் ரெட் கார்டு எவிக்ஷனுக்கு பின்னர் ஒரு வாரம் அனல்பறந்த இந்நிகழ்ச்சி, அடுத்த வாரமே புஸ்வானம் ஆனது. இதையடுத்து எப்படியாவது டிஆர்பி-யை எகிற வைக்கும் முனைப்பில் பல்வேறு டாஸ்க்குகளை கொடுத்து பார்த்தும் எதுவும் எடுபடவில்லை. இதையடுத்து தான் இந்த வாரம் தொடக்கத்தில் ஒரு குண்டை தூக்கி போட்டார் பிக்பாஸ்.
Bigg Boss Tamil season 7
அதன்படி பூகம்பம் என்கிற பெயரில் டாஸ்க் ஒன்றை அறிவித்தார். மொத்தம் 3 பூகம்பம் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் வெற்றிபெற்றால் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் தோல்வியுற்றால் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்று அறிவித்திருந்தனர். பிக்பாஸின் இந்த டுவிஸ்ட் போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துவிட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vichithra, archana
இதையடுத்து நடத்தப்பட்ட மூன்று பூகம்பம் டாஸ்க்குகளில் ஒன்றில் மட்டுமே ஹவுஸ்மேட்ஸ் வெற்றி பெற்றனர். மற்ற இரண்டில் தோல்வி அடைந்ததால், இந்த வாரம் இருவர் எலிமினேட் ஆக உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வெளியேறும் இருவருக்கு பதிலாக எலிமினேட் ஆனவர்களில் இருந்து இருவர் இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் யார் என்பது நாளை தெரிந்துவிடும்.
mani, akshaya
மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என்பதால், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய 8 பேரில் விசித்ரா, அர்ச்சனா, மணி ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் அவர்கள் ஈஸியாக காப்பாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கு அடுத்து இருக்கும் ரவீனா, பிராவோ, அக்ஷயா, மாயா, பூர்ணிமா ஆகிய 5 பேருக்கும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளது. இதனால் இந்த வார எவிக்ஷனில் செம்ம டுவிஸ்ட் காத்திருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
Bravo, dinesh
மாயா, பூர்ணிமா ஆகிய இருவரில் ஒருவரை எலிமினேட் செய்துவிட்டால் ஆட்டம் சூடுபிடிக்கும் என்பதால் இவர்கள் இருவரில் ஒருவர் எவிக்ட் ஆவது உறுதி. அதேபோல் மிக்சர் கேங் எனப்படும் அக்ஷயா, பிராவோ ஆகிய இருவரில் இருந்தும் ஒருவர் இந்த வாரல் எலிமிமேட் ஆக அதிகம் வாய்ப்புக்கள் உள்ளது. இதில் என்னென்ன டுவிஸ்ட் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மன்னிப்பு கேட்ட மன்சூர்; மாட்டிக்கொண்ட சீனு ராமசாமி! தர்மதுரை இயக்குனர் மீது தாறுமாறாக குவியும் பாலியல் புகார்