MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Cool Suresh Meet Santhanam: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும்... சந்தானத்தை சந்தித்த கூல் சுரேஷ்!

Cool Suresh Meet Santhanam: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும்... சந்தானத்தை சந்தித்த கூல் சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய காமெடி நடிகர் கூல் சுரேஷ், தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சந்தானத்தை சந்தித்துள்ளார். இதுகுறித்த சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 19 2023, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Cool Suresh Bigg Boss

Cool Suresh Bigg Boss

பிரசாந்த் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான 'சாக்லேட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கூல் சுரேஷ். ஆரம்பத்தில் சின்ன சின்ன நெகடிவ் கதாபாத்திரங்களை தேடி பிடித்து நடித்து வந்த இவர், நாளடைவில் காமெடி நடிகராக மாறினார். தொடர்ந்து சிம்பு மற்றும் சந்தானம் ஆகியோர் படங்களில் கூல் சுரேஷுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தனர்.
 

25
Cool Suresh

Cool Suresh

தமிழ் சினிமாவில் கூல் சுரேஷுக்கு பல நண்பர்கள் இருந்தாலும், தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை நன்கு அறிமுகமானவர்கள் இருந்தாலும், ஏனோ இவரால் 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்தாலும் முன்னணி இடத்தை நோக்கி நகர முடியவில்லை. 

Bigg Boss Promo: மன்னிப்பு கேட்ட அம்மாவின் செயலால் ஷாக்கான பூர்ணிமா! ஃப்ரீஸ் டாஸ்கில் நடந்ததை நீங்களே பாருங்க
 

35

பட வாய்ப்புகள் கை கொடுக்காத நிலையில், யூடியூப் பக்கத்தில் கவனத்தை செலுத்திய இவர், ஒவ்வொரு வாரமும்... காமெடி செய்து கொண்டே படத்தை விமர்சிக்கிறேன் என கூறி, செய்த கோமாளித்தனங்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இப்படி செய்ததால் இவருக்கு யூடியூப் மூலம் வருமானம் கிடைத்ததோ இல்லையே மக்களின் வெறுப்புகளை சம்பாதித்தார்.

45

எப்படியும் திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று, சிம்புவின் சிபார்சுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து மிகவும் நிதானமாக விளையாடிய கூல் சுரேஷ் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குடித்து தப்பிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

55

இதுவே இவர் குறைவான வாக்குகளை பெற காரணமாக அமைந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இவருக்கு பலர் தங்களின் ஆதரவை கொடுத்து வரும் நிலையில்... கூல் சுரேஷ் தன்னுடைய நண்பர் சந்தானத்தை சந்தித்துள்ளார். சந்தாலும் கூல் சுரேஷுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போத்தி பாராட்டிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சந்தானம்
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved