பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபைனலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று முதல் ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பமாகிறது. அதில் நடந்த கலாட்டாவை நீங்களே பாருங்க. 

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கியது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை மக்கள் வாக்குகளின் அடிப்படையில் பல போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, பூர்ணிமா, மாயா, ரவீனா, மணி சந்திரா, விக்ரம், விஷ்ணு, விஜய் வர்மா, நிக்சன் ஆகியோர் உள்ளனர்.

கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறிய நிலையில்.. இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சிக்கியுள்ள போட்டியாளர்களின் யார் வெளியேறுவார் என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக தற்போது 79 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற உள்ளது.

பிரபு மகளை இரண்டாவது திருமணம் செய்ய ஆதிக் போட்ட கண்டீஷன்? 500 கோடி வரதட்சிணை.. பிரபலம் கூறிய தகவல்!

முதல் நாளான இன்று, பூர்ணிமாவின் அம்மா, அர்ச்சனா பெற்றோர், விக்ரம் பெற்றோர், விஜய் வர்மா பெற்றோர் உள்ளே வருவதும்... உணர்ச்சி பொங்க தங்களின் பெற்றோர் மற்றும் உறவுகளை கட்டி அணைத்து பெற்றோர் பாசத்தை மரிமாறியதையும் முதல் புரோமோவில் பார்க்க முடிந்தது.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில்... பூனிமாவின் அம்மா விசித்ராவிடம், என்னுடைய மகள் உங்கள் மனம் நோகும்படி பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் என கூறுகிறார். இதை கண்டு, பூர்ணிமா செம்ம ஷாக் ஆகிறார். இதை தொடர்ந்து அர்ச்சனாவை பார்த்து என் தங்கம் என கட்டி அணைத்து முத்தம் கொடுப்பது... பூர்ணிமாவுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விக்ரமின் தந்தை விஜய் வர்மாவிடம் பேசும் போது... இவன் வாய்ஸ் அவுட் பண்ண மாட்டீங்குறான் இவனுக்கு பதிலா நாம கேட்டுட்டு போயிடலாமா என்று கூட தோன்றி இருக்கு என தெரிவிக்கிறார். மணிச்சந்திராவின் அம்மா... கண் ஜாடையிலேயே உங்கள் இருவருக்குள் என்ன நடக்கிறது என கேட்டது, பார்க்கவே செம்ம கியூட்டாக இருந்தது. மொத்தத்தில் இன்றைய தினம் மிகவும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Bigg Boss Tamil Season 7 | 19th December 2023 - Promo 2