MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Bigg Boss: பிக்பாஸ் நிகழ்ச்சி வன்மத்தை தூண்டுகிறதா? வனிதாவை தொடர்ந்து ரசிகர்களால் தாக்கப்பட்ட போட்டியாளர்.!

Bigg Boss: பிக்பாஸ் நிகழ்ச்சி வன்மத்தை தூண்டுகிறதா? வனிதாவை தொடர்ந்து ரசிகர்களால் தாக்கப்பட்ட போட்டியாளர்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, சிலர் அதை சீரியஸாக எடுத்து கொண்டு, எதார்த்தத்தை மீறும் வகையில் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது போட்டியாளர் ஒருவர் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 18 2023, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss

Bigg Boss

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மற்ற தென்னிந்திய மொழிகளிலும் துவங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி துவங்குவதற்கு ஓரிரு வாரத்திற்கு முன்பே, பிக்பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.
 

25

இதில் போட்டியாளர்களாக நடிகை கிரண், ஷகீலா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது. இதில் விவசாயம் குறித்த தகவல்களை கூறி யூடியூப் மூலம் பிரபலமான பல்லவி பிரஷாந்த் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

lநயன்தாராவை விட டபுள் மடங்கு சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா - அவரின் Net worth இவ்வளவா?
 

35

இரண்டாவது இடத்தை, பிரபல சீரியல் நடிகரும்... விஜய் டிவி சீரியல் நடிகை தேஜஸ்வினியின் கணவர் அமர்தீப் பெற்றார். மேலும் கடைசி வரை அமர்தீப் மற்றும் பல்லவி பிரஷாந்த்த்துக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவிய நிலையில்... மக்களின் ஆதரவோடு பல்லவி பிரசாந்தை வெற்றியாளர் என அறிவித்தார் தொகுப்பாளர் நாகர்ஜுனா.
 

45

இந்நிலையில் நேற்று அமர்தீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கார் மூலம் வீட்டுக்கு சென்ற போது.. பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் சிலர், அவரது காரை தாக்கி உடைத்தது மட்டும் இன்றி, காரை துரத்திக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் பலர் ரசிகர்களின் இந்த செயலுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

லியோ படத்துல செஞ்ச மிகப்பெரிய மிஸ்டேக் அதுதான்... இனி எந்த படத்துலையும் அதை செய்ய மாட்டேன் - லோகேஷ் கனகராஜ்

55

ஏற்கனவே பிரதீப்பின் ரெட் கார்டு பற்றி வனிதா விஜயகுமார் யூடியூப் பக்கத்தில் பேசியதற்கு... அவரை தாக்கி கண்கள் வீங்கிய நிலையில், இப்போது தெலுங்கிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved