MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புடவைகளுக்காக ஒரு வீடே வைத்திருக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா மகாலட்சுமி.! எத்தனை புடவை வச்சிருக்காங்க தெரியுமா?

புடவைகளுக்காக ஒரு வீடே வைத்திருக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா மகாலட்சுமி.! எத்தனை புடவை வச்சிருக்காங்க தெரியுமா?

விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி தன்னுடைய புடவைகளுக்காக மட்டுமே, பெங்களூரில் தனியாக வீடு ஒன்றை வைத்துள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 02 2023, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Thamizha Thamizha Show

Thamizha Thamizha Show

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, அதிகமாக சேலை வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள் மற்றும் புடவை வியாபாரிகள் இடையே விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொண்ட பெண்கள் பலர் தங்களிடம் 1000 புடவை உள்ளது, 2000 புடவை உள்ளது என கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

25
Vijay tv Rachitha Mahalakshmi

Vijay tv Rachitha Mahalakshmi

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரக்ஷிதா மகாலட்சுமியும் கலந்து கொண்டார். தொகுப்பாளர் அனைவரையும் பார்த்து, 1000 புடவைகளுக்கு மேல் யாரெல்லாம் வைத்திருக்கிறீர்கள் என கேட்டபோது, நானும் கை தூக்கலாமா என சிறப்பு விருந்தினராக வந்திருந்த மகாலட்சுமியின் கைகளை உயர்த்தினார்.

16 வயசில் திருமணம், புருஷன் கொடுமை... பெத்த புள்ளைங்க கூட கண்டுக்கல.! வடிவேலு பட நடிகை சுமதியின் கண்ணீர் கதை!

35
Rachitha Mahalakshmi have 5000 Sarees:

Rachitha Mahalakshmi have 5000 Sarees:

நீங்களுமா? என ஆச்சர்யத்துடன் தொகுப்பாளர் கேட்க, "நீங்க  1000 புடவையுடன் நிறுத்திடீங்க... நான் ஒரு 5000 புடவை வைத்திருப்பேன் என கூறி அதிர்ச்சி கொடுத்தார் ரக்ஷிதா. மேலும் சில சமயங்களில் நான் ஏதாவது கடைகளுக்கு சென்று பார்க்கும் போது, என்னுடைய அசிஸ்டெண்ட்ஸ்... அக்கா நம்ப வீட்டுல இருக்குற புடவைகளை விட, இங்கு குறைவாக உள்ளது என கூறி கலாய்த்துக்கொண்டிருப்பார்கள், அந்த அளவுக்கு என்னிடம் அதிகமான புடவைகள் உள்ளது.

45
Rachitha Mahalakshmi Saree Collections:

Rachitha Mahalakshmi Saree Collections:

மேலும் தன்னுடைய புடவைகளுக்காகவே, பெங்களூரில் 3 BHK பிளாட் ஒன்றை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு புடவையும் ரூ.5000 விலை இருக்கும். சிலர் தன்னுடைய புடவையை பார்த்து விட்டு, இந்த புடவை தனக்கு வேண்டும் என கேட்டால் அதனை ஆன் லைனிங் விற்பனை செய்து விடுவேன். இதனால் நான் ஒரு சேல்ஸ் மேன்னாகவும் மாறிவிட்டேன் என ரஷிதா கூறியுள்ளார். ஆன்லைனில் சேல்ஸ் செய்தது போக 5000 புடவை வைத்துள்ளதாக ரக்ஷிதா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் இவங்க ரெண்டுபேரும் லவ்வர்ஸா? இது தெரியாம போச்சே.. வைரலாகும் போட்டோஸ்!
 

55
Rachitha Mahalakshmi maximum saree rate:

Rachitha Mahalakshmi maximum saree rate:

மேலும் தன்னிடம் அதிகபட்சம் காட்டான் புடவைகள் தான் இருக்கும். கைத்தறியில் நெய்யப்பட்ட புடவைகள் உடுத்த எனக்கு மிகவும் பிடிக்கும். அதிக விலையில் என்னிடம் ஒரே ஒரு பியூர் மைசூர் சில்க் சாரி உள்ளது அதன் விலை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என ரக்ஷிதா மகாலட்சுமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved