பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் இவங்க ரெண்டுபேரும் லவ்வர்ஸா? இது தெரியாம போச்சே.. வைரலாகும் போட்டோஸ்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் உள்ளே காதல் ஜோடி நுழைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த முறை ரொமான்ஸுக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில்... வெற்றியாளராக விஜய் டிவி சீரியல் நடிகர் அசீம் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு மாதமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்குவது பற்றிய அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வந்தது.
கடந்த மாதமே பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசனின் தனிப்பட்ட விஷயம் காரணமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கோலாகலமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது.
மேலும் இந்த முறை, இரண்டு பிக்பாஸ் வீடு இருந்தாலும், இரண்டு வீட்டுக்கும் ஒரே வாசல், ஒரே சமையலறை மட்டுமே உள்ளது. மேலும் இந்த முறை போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாகா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை, விஜய் வர்மா போன்ற 18 போட்டியாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
கமல்ஹாசன் ப்ரோமோவில் 20 போட்டியாளர்கள் என கூறியுள்ளதால், இன்னும் இரண்டு புது போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் முதல் மௌனராகம் வரை.. பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் குக் வித் கோமாளி.. யார் இந்த ரவீனா தாஹா?
முதல் நாளே, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களில், ஆறு பேர் இரண்டாவது வீட்டிற்கு தண்டனை கொடுத்து அனுப்பப்பட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே ஒரு காதல் ஜோடியும் நுழைந்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இரண்டாவது போட்டியாளராக நுழைந்த ரவீனா தாஹா, நடன இயக்குனர் மணிச்சந்திரா உள்ளே வந்த போது... ஓடிச் சென்று அவரை கட்டி அணைத்து வரவேற்றார்.
இதன் மூலம் ஏற்கனவே மணிச்சந்திரா, ரவீனாவுக்கு அறிமுகமானவர் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். பின்னர் ரவீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆராய்ந்த போது தான், இவர்கள் இருவரும் துபாய் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று மிகவும் நெருக்கமாக போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஒரு தகவல்... தீயாக பரவி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.