'ப்யூட்டிஃபுல் டாக்டர்’ அலிஷா அப்துல்லா... தலக்கே டஃப் கொடுக்கும் அஜித் தோழி..!
அலிஷா அப்துல்லா... மாடலிங் மங்கையாகவும் ஜொலிக்கிறார். கார் பந்தய வீராங்கனையாகவும் பரிமளிக்கிறார். திரைப்பட நடிகையாகவும் தலைகாட்டுகிறார். அவற்றை எல்லாம் விட தற்போது அழகுக்கலை மருத்துவராக பளபளக்கிறார்.
தனது 17வது வயதில் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றவர். 2009ல் ஜே.கே.டயர்ஸ் நடத்திய தேசிய அளவிலான பைக் ரேஸில் சாமிப்யன் பட்டம் வென்றுள்ளார். இப்படி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார் அம்மணி.
அஜித்துடன் பல பைக் ரேஸிங் விளையாட்டுகளில் கலந்து கொண்டு கெத்து காட்டிய பெண்மணி, அலிஷா அப்துல்லா. சென்னையைச் சேர்ந்த இவர், கார் மற்றும் பைக் ரேஸ் சாம்பியன். தல அஜித்தின் தீவிர ரசிகையும் கூட.
alishah
அலிஷாவின் தந்தை ஆர்.ஏ.அப்துல்லாவும், அஜித்துடன் பல பந்தயங்களில் பங்கேற்றுள்ளார்.
அதர்வா நடித்த இரும்பு குதிரை திரைப்படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
alishah
சில மாதங்களுக்கு முன்பு அஜித் பற்றி ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். பல வருடங்களுக்கு முன்பு அஜித் சென்னையில் உள்ள ஒரு ரேஸ் ட்ராக்கிற்கு வந்த போது அவரை அதிக அளவில் மக்கள் சூழ்ந்து கொண்டனர் என்றும் அவரை ஒரு இன்ச் கூட நகர விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்று நடப்பதால் தான் அஜித் பொது இடங்களுக்கு வருவதில்லை. மக்கள் யாரும் அவருக்கு பிரைவசி கொடுப்பதில்லை என அலிஷா அப்துல்லா தெரிவித்திருந்தார்.
அலிஷா அப்துல்லா ரேஷிங் அகடாமி நடத்தி வரும் அவர் அந்த நிறுவனத்தின் குழு தலைவராக இருக்கிறார்.
alishah
ஹரிஸ்மா பியூட்டி கிளினிக் நடத்தி வருகிறார். ஒரு மருத்துவராகவும் சிறப்பான சேவையை வழங்கி வருகிறார்.
அந்த ப்யூட்டி க்ளினிக்கின் தலைமை செயல் அதிகாரியும்கூட.
சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவி பெண்கள் கல்லூரியில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவர் இவ்வளவு சாதிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மருத்துவரான உங்களிடம் அஜித்பியூட்டி டிப்ஸ் கேட்டதுண்டா அலிஸா..?