Bhumika Chawla: 45 வயதிலும் அதிகாலை ஆதவனை அழகால் மயக்கிய பூமிகா! சேலை அழகில் சுழட்டி போட்ட போட்டோஸ்!
நடிகை பூமிகா தன்னுடைய 45 வயதிலும் அனைவரையும் வசீகரிக்கும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த நடிகை பூமிகா சாவ்லா, கடந்த 2000வது ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பார்ப்பதற்கு மிகவும் எளிமையான அழகிலும், ஹோம்லி லுக்கில் இருந்த இவரை பார்த்ததுமே டோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.
இதை தொடர்ந்து கோலிவுட் ரசிகர்களின் கண்களும் இவர் மீது விழ, 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடிவில் வெளியான பத்ரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் பூமிகா.
பத்ரி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு மட்டும் இன்றி, பூமிகாவுக்கும் தமிழ் திரையுலகில் பல வாய்ப்புகளை பெற்று கொடுத்தது.
இப்படத்தை தொடர்ந்து, தமிழில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக இவர் நடித்த ரோஜா கூட்டம், இவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. தெலுங்கு திரையுலகில் படு பிஸியான நடிகையாக வலம் வந்ததால்... இவர் பல தமிழ் பட வாய்ப்புகளை இழந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதே போல் கதையை தேர்வு செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். 'ரோஜா கூட்டம்' படத்தின் வெற்றிக்கு பின்னர், சுமார் 4வருடம் கழித்து தான், சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்த, 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பரத் தாகூர் என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பூமிகா, தொடர்ந்து தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, போஜ்புரி, மலையாளம், பஞ்சாபி, கன்னடம் மற்றும் என பல்வேறு மொழிகளில், மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் கூட அசால்டாக நடித்து வரும் பூமிகா, தன்னுடைய 45 வயதிலும் அழகில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது பிங்க் நிற சேலையில்... அந்த ஆதவனே அழகில் மயங்கும் அளவுக்கு எலகென்ட் லுக்கில் இவர், வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.