Kushboo: தீபாவளிக்கு தகதகவென ஜொலித்த நடிகை குஷ்பூவின் பிரமாண்ட வீடு! சந்தோஷமான தருணங்களின் கலகலப்பான போட்டோஸ்!
தீபாவளிக்கு தன்னுடைய வீட்டையே வண்ண விளக்குகளால் அலங்கரித்து, இந்த தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை குஷ்பூ. இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தீபாவளி என்றாலே சிறுசு முதல் பெருசு வரை எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். ஜாதி - மதம் கடந்து அனைவருமே ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, புத்தாடை அணிந்து தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள்.
இல்லத்தரசிகள் பலர், தீபாவளி அன்று... அந்த தீபத்தின் ஒளி வீடு முழுவதும் பரவி, லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என பூஜைகள் செய்து வழிபடுவதை தாண்டி, அகல் விளக்குகளால் வீடுகளை அலங்கரிப்பார்கள்.
குழந்தைகளோ, பட்டாசு வெடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் தான் என்னவோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கொண்டாட்டமாக அமைகிறது தீபாவளி.
இதுபோன்ற தீபாவளி விழாவை பிரபலங்களும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், நடிகை குஷ்பூ... தன்னுடைய வீட்டையே வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தன்னுடைய பிரமாண்ட வீட்டின் புகைப்படத்தையும், தற்போது குஷ்பூ வெளியிட்டுள்ளார். அதே போல் குடும்பத்தினருடன் எடுத்த கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்ததால் கொண்டாட முடியவில்லை என்றும், எனினும் அன்பான நபர்களுடன் மிகவும் சந்தோஷமாக இந்த நாள் கழிந்ததாக தெரிவித்துள்ளார்.
அதே போல் தன்னுடைய மூத்தமகன் அவந்திகாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் தங்களுடன் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி இந்த ஆண்டு கொண்டாடவில்லை என்றாலும், குஷ்புவின் குடும்பத்திற்கு இது ஒரு மிகசிறந்த நாளாகவே சென்றுள்ளது என்பது, இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.