MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Suriya: சூர்யாவின் அழுகை.. நடிப்பு என கூறிய பயின்வான்! கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியததன் பின்னணி இதுவா?

Suriya: சூர்யாவின் அழுகை.. நடிப்பு என கூறிய பயின்வான்! கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியததன் பின்னணி இதுவா?

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய போது, நடிகர் சூர்யா அழுதது நடிப்பு எனக் கூறி விமர்சித்துள்ளார் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன். 

2 Min read
manimegalai a
Published : Jan 07 2024, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும், அரசியல் வட்டாரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருடைய உடல் தேமுதிக அலுவலகம் முன்பு இருக்கும், விஜயகாந்துக்கு சொந்தமான இடத்திலேயே சந்தன பேழைக்குள் வைத்து அரசு மரியாதையுடன், 72 குண்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

26

மேலும் இவருடைய இறுதி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பிரபலங்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும் கலந்து கொண்ட நிலையில்... இறுதிச் சடங்கில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விஜயகாந்த் உயிரிழந்த ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் நிலையில், தற்போது வரை விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்து வருகின்றனர். அதேபோல் அடுத்தடுத்து பல பிரபலங்கள் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, மாலை அணிவித்து கற்பூரம் காட்டி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமின்றி விஜயகாந்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அக்காவிடம் கலைஞர் மாதிரி வைத்து விடுங்கள் என சொல்லி அடம்பிடிப்பேன்! கலைஞர் 100 விழாவில் கமல் பகிர்ந்த தகவல்!

36

விஜயகாந்த் இறப்பின் போது நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்த நிலையில், காரில் சென்று கொண்டிருக்கும் போதே விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சூர்யா தன்னுடைய தந்தை சிவக்குமார், மற்றும் சகோதரன் கார்த்தியுடன் வந்து விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குலுங்கி குலுங்கி அழுது... கண்ணீர் சிந்திய படி, அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் இருவரையும் சந்தித்து தன்னுடைய ஆறுதலை கூறினார் .

46

இந்த சம்பவம் குறித்து பேசி உள்ள பிரபல சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சூர்யாவை "நீ வீட்டில் இருந்து வரும்போது கிளசரின் போட்டுவிட்டு வந்து விட்டாயா? நீ அழுதால் கேப்டன் வந்து விடுவாரா என பேசி பொளந்து காட்டியுள்ளார்.

Meena: ஹீரோ பத்தி பேசுறது இல்லை... ஹீரோயினா மட்டும் இப்படி? கீழ்த்தனமான வதந்திக்கு பளார் பதிலடி கொடுத்த மீனா!
 

56

மேலும் விஜயகாந்துக்கு நடிகர் சூர்யா காரில் சென்று கொண்டிருக்கும்போது இரங்கல் தெரிவித்தது கூட நடிப்புதான். தற்போது இவர்கள் மூன்று பேரும் வந்து அஞ்சலி செலுத்த காரணம் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்லவில்லை என்றால், நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும். நம் மகன்களின் படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்கிற பயத்தில்தான் பிள்ளைகளை அழித்துக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் சிவக்குமார் என தெரிவித்துள்ளார்.

66
Bayilvan Ranganathan

Bayilvan Ranganathan

அதேபோல் சூர்யாவின் திருமணத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ள மாட்டேன் என கூறிய தகவலையும் நினைவு கூர்ந்துள்ள பயில்வான் ரங்கநாதன், அந்த சமயத்தில் சிவக்குமார் ஜெயலலிதா, கலைஞர், போன்ற அரசியல் தலைவர்களுக்கும் பத்திரிக்கை வைத்திருந்ததால்...  அந்த திருமணத்தில் கலந்து கொண்டால் பிரச்சனை வரும் என்பதற்காக விஜயகாந்த் கலந்து கொள்ள முடியாது என கூறினார். பின்னர் ஒரு மாதம் கழித்து, சூர்யாவின் வீட்டிற்கு சென்று விலை உயர்ந்த ஒரு பொருளை கொடுத்து வாழ்த்தியதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sobhita Dhulipala: சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் காதலா? உண்மையை ஓப்பனாக கூறிய சோபிதா துலிபாலா!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved