MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Meena: ஹீரோ பத்தி பேசுறது இல்லை... ஹீரோயினா மட்டும் இப்படி? கீழ்த்தனமான வதந்திக்கு பளார் பதிலடி கொடுத்த மீனா!

Meena: ஹீரோ பத்தி பேசுறது இல்லை... ஹீரோயினா மட்டும் இப்படி? கீழ்த்தனமான வதந்திக்கு பளார் பதிலடி கொடுத்த மீனா!

நடிகை மீனா தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் வதந்திக்கு பளார் பதிலடி கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 05 2024, 09:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
meena

meena

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும், ஒரு சில நடிகர் - நடிகைகள் மட்டுமே ஹீரோ, ஹீரோயினாக  தங்களுடைய வெற்றியை பதிவு செய்கின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தவர் மீனா.  

28
meena

meena

இடைத்தொடர் தன்னுடைய 15 வயதில், 1990-ஆம் ஆண்டு தெலுங்கில், 'நவயுகம்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், அதே ஆண்டு 'ஒரு புதிய கதை' என்கிற படத்தில் அறிமுகமானாலும், இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என் 'ராசாவின் மனசிலே' திரைப்படம் தான்.  இப்படத்தின் மூலம் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மீனாவுக்கு, அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அடேங்கப்பா... டைட்டில் வின்னரை கூட இப்படி வரவேற்க மாட்டாங்க! பணத்தோடு வெளியேறிய பூர்ணிமாவுக்கு ஜோரான வரவேற்பு!

38

தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த், ரஜினி, கமல்ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ், முரளி, கார்த்திக் போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா, சிட்டிசன், வில்லன் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக, நடித்துள்ள மீனா விஜய் உடன் ஷாஜகான் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
 

48

தென்னிந்திய திருவிழாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மீனா, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் இடைவிடாது நடித்து வருகிறார். புதிய ஹூரோயின்ஸ் வருகையால் பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன வித்தியாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு நைனிகா என்கிற அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.

Poornima: கமல் கழுவிகழுவி.. ஊத்துனத்துக்கே இந்த அலப்பறையா? ஆளுயர மாலை... தெருவில் குத்தாட்டம் போட்ட பூர்ணிமா!
 

58

நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், தற்போது தன்னுடைய படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் மீனாவின் கணவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. பல முன்னணி நட்சத்திரங்கள் வித்யாசாகரின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 

68

கணவர் மறைவுக்கு பின்னர் மெல்ல.. மெல்ல.. அவருடைய நினைவில் இருந்து வெளியே வந்துள்ள மீனா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில் தற்போது தமிழில் 'ரவுடி பேபி 'என்கிற படத்திலும், மலையாளத்தில் 'ஆனந்தபுரம் டைரி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

Sobhita Dhulipala: சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் காதலா? உண்மையை ஓப்பனாக கூறிய சோபிதா துலிபாலா!
 

78

கணவர் மறைவுக்கு பின்னர் மீனா தனியாக வாழ்ந்து வருவதால், அடிக்கடி மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு மீனா நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார்.
 

88

இது குறித்து மீனா கூறுகையில், "ஒரு ஹீரோ தனியாக இருந்தால், அவரைப் பற்றி எந்த ஒரு அவதூறான வதந்திகளும் பரப்பப்படுவது இல்லை. அதுவே ஒரு ஹீரோயின் கணவரை இழந்து தனியாக இருந்தால் மட்டும் அவரைப் பற்றி இப்படி கீர்த்தனமாக பேசுகின்றனர். எத்தனையோ பேர் கணவரை இழந்து தனியாக உள்ளனர். பெண்களால் தனியாக வாழ முடியும். எனக்கு இரண்டாம் திருமணம் குறித்து எந்த ஒரு யோசனையும் கிடையாது. என்னுடைய முழு கவனமும் என் மகள் நைனிகா மீது தான் உள்ளது என மீனா தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீனா பற்றி பரவி வரும் தகவல்கள் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Baakiyalakshmi: 'பாக்கியலட்சுமி' தொடரில் இருந்து சன் டிவிக்கு ஜம்ப்பான பிரபல நடிகை! இவங்க தான் ஹீரோயினா?
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved