MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ajith Help: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரகசியமாக உதவிய அஜித்! பயில்வான் கூறிய ஆச்சர்ய தகவல்!

Ajith Help: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரகசியமாக உதவிய அஜித்! பயில்வான் கூறிய ஆச்சர்ய தகவல்!

நடிகர் அஜித் குமார், 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து தவித்த 100 பேருக்கு அடைக்கலம் கொடுத்து, பணம் கொடுத்து உதவியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Dec 15 2023, 09:34 AM IST| Updated : Dec 15 2023, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிக்ஜாம் புயல் உருவானது. இதனால் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியத்துடன் கனமழை பெய்தது.
 

26

இதனால் மற்ற பகுதிகளை விட சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்களை மீட்கும் பணியில் சென்னை காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு துறையினர், ஆகியோர் களத்தில் இறங்கினர். அதே 
போல் ஏராளமான சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு உதவ முன் வந்தனர்.

பிரமாண்டமாக நடந்து முடிந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய விஷால்!

36

பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே போல் சென்னையில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. மார்பளவு தண்ணீர் இருந்ததால் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கினர். தண்ணீர், உணவு, மின்சாரம், போன்றவை இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளான நிலையில், படகுமூலம் மக்களை தேடிச் சென்று உணவு வழங்கப்பட்டது.

46

குறிப்பாக பிரபல நடிகர் விஷ்ணு விஷால், மற்றும் அமீர் கான் ஆகியோர் காரப்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டுக்குள் முடங்கினர். இதுகுறித்து விஷ்ணு விஷால் சில புகைப்படம் வெளியிட்டு  தெரிவித்த பின்னர் தமிழக தீயணைப்பு துறையினர் காரப்பாக்கம் பகுதியில் உள்ள மக்களை மீட்கும் பணியில் இறங்கினர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56

விஷால் மற்றும் அமீர் கானை வெள்ளத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்ட பின்னர், அவர்களை சந்தித்து அஜித் உதவினார். இதுகுறித்தும் விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில், அஜித் பிரபலங்களுக்கு மட்டுமே உதவி செய்வதாகவும்... சாதாரண மக்களை கண்டுகொள்ளவில்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

66
Bayilvan Ranganathan

Bayilvan Ranganathan

இதுபோன்ற விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுப்பது போல் பிரபல நடிகரும் - பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஆச்சர்ய தகவல் ஒன்றை கூறியுள்ளார், அஜித் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 100 பேரை, தன்னுடைய வீட்டில் பத்திரமாக தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்கியதாகவும், பின்னர் அந்த மக்கள் செல்லும்போது அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஊர் உலகத்திற்கு தெரியாமல் அஜித் செய்த உதவி தற்போது வெளியாகியுள்ள நிலையில், பலர் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

நயன்தாரா இல்லாமல் நடந்த விக்கி இயக்கும் LIC பட பூஜை! இளம் ஹீரோயினுடன் ஜோராக போஸ் கொடுத்த பிரதீப்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஆமிர் கான்
விஷ்ணு விஷால்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved