வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள்... வாழ்த்தோடு தளபதி 68 அப்டேட்டையும் வாரி வழங்கிய அர்ச்சனா கல்பாத்தி
இயக்குனர் வெங்கட் பிரபு இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தளபதி 68 அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
Thalapathy 68
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய், தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சென்னையில் செட் அமைத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
thalapathy 68 team
தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை மீனாட்சி செளத்ரி நடித்து வருகிறார். இதுதவிர நடிகைகள் லைலா, சினேகா, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. ஒரு மாதம் சென்னையில் தளபதி 68 படப்பிடிப்பை நடத்திய படக்குழு, கடந்த வாரம் தாய்லாந்துக்கு கிளம்பி சென்றது. அங்கு தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
archana kalpathi, venkat prabhu
இந்த நிலையில் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாளான இன்று எக்ஸ் தளம் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, தாய்லாந்தில் அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தளபதி 68 படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு இருக்கிறார் அர்ச்சனா.
archana kalpathi X post
அதன்படி அவர் பதிவிட்டுள்ளதாவது : “தளபதி 68 படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சியை தற்போது படமாக்கி வருகிறார்களாம். நேற்று இரவு முழுவதும் படப்பிடிப்பு நடத்திய வெங்கட் பிரபுவுக்கு இன்று பிறந்தநாளை கொண்டாட விடுமுறை அளித்துவிட்டோம்” என அர்ச்சனா தன் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி எதிர்பாராத அப்டேட்டை கொடுத்த அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இனி பேச்செல்லாம் கிடையாது வீச்சு தான்! டாஸ்க்கில் ஜெயித்து பிக்பாஸ் வீட்டாரை கதறவிட்ட சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்