கண்ணா 2 லட்டு திங்க ஆசையா..! பொங்கலுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்
பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படம் ரிலீஸ் ஆவது போல் மற்றுமொரு சர்ப்ரைஸும் ரசிகர்களுக்காக காத்திருக்கிறதாம்.
sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த திரைப்படம் அயலான். அப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் கடும் போராட்டங்களுக்கு பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து ரிலீசாக உள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அயலான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. பேண்டஸி திரைப்படமான இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
Sivakarthikeyan Ayalaan
பொங்கல் ரேஸில் அயலான் படத்துக்கு போட்டியாக ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4, விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள மெரி கிறிஸ்துமஸ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கேப்டன் மில்லர் ஆகிய 4 படங்கள் வெளியாக உள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
SK21 sivakarthikeyan
பொங்கலுக்கு அயலான் படம் ரிலீசாவதால் சந்தோஷத்தில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மற்றுமொரு செம்ம சர்ப்ரைஸும் காத்திருக்கிறது. அது என்னவென்றால் அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் எஸ்.கே 21 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட உள்ளார்களாம். இதனால் பொங்கலன்று சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
Sivakarthikeyan Sai Pallavi
எஸ்.கே.21 திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பா.இரஞ்சித்தின் அடுத்த படம் ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’! 4 பெண்களுடன் தரமான சம்பவம் செய்ய தயாரான தங்கலான் இயக்குனர்