Anna Serial: தீபாவளி சீர் விஷயத்தில் பெட் கட்டும் பரணி! ஷாக் கொடுத்த முத்துப்பாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தின்தோறும் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி தோழிகளிடம் சிக்கி கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பாக்கியம் சண்முகத்துக்கு போன் செய்து, நாளைக்கு சீர் கொடுக்க வரோம் என்று சொல்ல அதை கேட்டு வைகுண்டம் சௌந்தரபாண்டி மீது கோபம் கொள்ள பரணி அப்பாவுக்கு போன் செய்து நீங்க சீர் கொண்டு வர கூடாது என்று சொல்கிறாள்.
சிவபாலன் சனியனிடம் சென்று நீங்க உங்க பொண்ணுக்கு சீர் கொடுக்கறீங்க தானே, அதே மாதிரி எங்க அம்மாவுக்கு ஆசை இருக்கும்ல. நீங்க தான் எப்படியாவது அப்பாவை சீர் கொடுக்க வர வைக்கணும் என்று உதவி கேட்க ஒரே நாள்ல என்னை சுடுகாட்டுக்கு அனுப்ப பிளான் போடுறியா என்று சொல்ல இவன் நான் பணம் தரேன் என்று சொல்கிறான்.
நீங்க குடுக்கற 50,100-க்கு என் உயிரை விடணுமா என்று கேட்க, இல்ல 2000 ருபாய் தரேன் என அட்வான்ஸாக 1000 ரூபாய் எடுத்து கொடுக்க சனியன் டீலுக்கு ஓகே சொல்கிறார். மறுபக்கம் ஷண்முகம் வீட்டில் தோழிகள் ஏற்பாடு செய்து கொண்டிருக்க பரணி அதெல்லாம் வர மாட்டாங்க என்று சொல்ல ஷண்முகம் வருவாங்க பொண்டாட்டி என்று சொல்ல. இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது, இறுதியாக பரணி அவங்க வரலைனா நீ என்னை பொண்டாட்டி, ஓனர் அம்மானு கூப்பிட கூடாது என்று சவால் விட ஷண்முகம் அவங்க வந்தா என்கூட ஜோடியா நின்னு போட்டோ எடுத்துக்கணும் என சவால் விடுகிறான்.
சனியன் முத்துபாண்டியிடம் வாத்தியாரை ஊரை விட்டு துரத்தினோம், ஆனால் ரத்னா கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் காணவில்லை என்று கேட்க, முத்துப்பாண்டி ஆமா, ஆனால் அவ வீட்டிற்கு போய் பார்க்க முடியாதே என்று சொல்ல சனியன் அதான் சீர் குடுக்கற சாக்குல போலாமே என்று ஐடியா கொடுக்க முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சம்மதிக்க வைத்து கிளம்புகிறான். இங்கே கனி அண்ணா நீ ஜெயிச்சிட்ட சீர் எடுத்துட்டு வந்துட்டு இருக்காங்க என்று சொல்ல பரணி ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D