Asianet News TamilAsianet News Tamil

குடிகார அங்கிள்.. கமல்ஹாசனையே கேவலப்படுத்திய பூர்ணிமா! வீடியோ வெளியிட்டு வெளுத்து வாங்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக்பாஸ் போட்டியாளரான பூர்ணிமா ரவி, தொகுப்பாளரும், நடிகருமான கமலஹாசனையே குடிகார அங்கிள் என விமர்சித்து பேசி உள்ள வீடியோவை வெளியிட்டு, பிக் பாஸ் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
 

Poornima insulted Kamal Haasan for dunker video goes viral mma
Author
First Published Nov 22, 2023, 6:35 PM IST | Last Updated Nov 22, 2023, 6:35 PM IST

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சிலர் மிகவும் மூர்க்க தனமான ஸ்டார்ஜியுடன் விளையாடி வருவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரம் சில போட்டிகளார்கள், கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பிக் பாஸ் விதிகளை அதிகம் மீறி வருகின்றனர். இதையே ஒரு ஸ்டேடர்ஜியாக வைத்து விளையாடி வருகிறார்கள்.

Poornima insulted Kamal Haasan for dunker video goes viral mma

Mansoor Ali Khan:திரிஷா விவகாரம்.. மன்சூர் அலிகானுக்கு வந்த அடுத்த சிக்கல்! நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்!

இந்நிலையில் இந்த வாரம் பூர்ணிமாவிடம் கமலஹாசன் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இவரது கோபத்திற்கும், குமுறலுக்கும் காரணமாக இருந்தது அர்ச்சனாவை பலர் கைதட்டி வரவேற்றது தான். அதே நேரம் அர்ச்சனா மற்றும் விசித்ரா விதியை மீறியதற்காகவும் கமலஹாசன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.

Poornima insulted Kamal Haasan for dunker video goes viral mma

'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் பாடியுள்ள 'கில்லர் கில்லர்' பாடலின் லிரிகள் வீடியோ வெளியானது!

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை பற்றி காசிப் பேசி வந்த பூர்ணிமா, தற்போது கமலையும் விட்டு வைக்காமல் குடிகார அங்கிள் என வீடியோவை வெளியிட்டு வெளுத்து வாங்கி உள்ளார். அதாவது விக்ரமுடன் கமல் தன்னிடம் பேசிய விதம் குறித்து கூறிய பூர்ணிமா, "நாங்கள் செய்வது புல்லிங் என்றால், அவர்கள் செய்வதும் புல்லிங் தானே, என்ற கேள்விக்கு கமல் எந்த பதிலையும் சொல்லவில்லை என்றும், தன்னுடைய ப்ளாக்கை கூட கமலஹாசன் தவறாக சுட்டிக்காட்டி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

 

 

மகள் கார்த்திகாவுக்கு கிலோ கணக்கில் நகைகளை போட்டு திருமணம் செய்த.. நடிகை ராதா Net Worth எவ்வளவு தெரியுமா

ஆசிரியர் இரண்டு மாணவர்கள் தப்பு செய்யும் போது கண்டித்தால், "ஒருவரை பார்த்து ஏன்டா இப்படி செய்தாய் என்று கேட்டுவிட்டு, இன்னொருவரை பார்த்து இப்படி செய்யாதே என சாதுவாக கூறினால் அது எப்படி நடுநிலை ஆகும்? எனக்கு மனசு ஆறவே இல்ல... நான் முடிவு செஞ்சுட்டேன். என்ன வேணா பண்ணட்டும், நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. நான் இதனால் வெளியே போனாலும் பிரச்சனை இல்லை. நல்ல பெயரோடு வெளியே போக வேண்டும் என்று அவர் கூறினார். இதை தொடர்ந்து அந்த குடிகாரங்கள் அப்படி சொன்னார்... என கமல்ஹாசனை சுட்டிக்காட்டி பேசி உள்ளார். இது குறித்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios