MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காணாமல் போகும் சண்முகம்... பதறி போய் தேடி அலையும் குடும்பத்தினர் - அண்ணா சீரியல் அப்டேட்

காணாமல் போகும் சண்முகம்... பதறி போய் தேடி அலையும் குடும்பத்தினர் - அண்ணா சீரியல் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கொடுத்த காப்பியை குடிக்க மாட்டேன் என்று சண்முகம் தட்டி விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2024, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கி கல்யாணம் ஆகி போனது மறந்து இசக்கி காபி கொண்டு வா என்று கூப்பிட பரணி காபியை கொண்டு வந்து கொடுக்க நீ கொடுக்கிற காப்பியை குடிக்க மாட்டேன் என்று தட்டி விடுகிறான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் இசக்கி முத்து பாண்டிக்கு காபி எடுத்துக் கொண்டு வைக்க ரத்னா இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்க நீ எல்லாம் எனக்கு காபி கொண்டு வரியா என்று திட்டி அனுப்புகிறான். 

24
Zee Tamil Anna serial

Zee Tamil Anna serial

பிறகு பாக்கியம் என்ன ஆச்சு என்ன சொன்னான் என்று கேட்க இசக்கி நடந்த விஷயத்தை சொல்கிறாள். என்ன பண்றது பொம்பளைங்க வாழ்க்கையே இப்படித்தான் எனக்கும் பிடிக்காமல் தான் இந்த வாழ்க்கை அமைந்துவிட்டது. அதே மாதிரி தான் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்கிறாள். என் புருஷனை விட உன் புருஷன் நல்லவன் தான். அவனை எப்படியாவது அவங்க அப்பா கிட்ட இருந்து பிரிச்சுடு அப்புறம் எல்லாம் நல்லபடியா மாறும் என்று அட்வைஸ் கொடுக்க இதை பாண்டியம்மா பார்த்து விடுகிறாள். 

இதையும் படியுங்கள்... இப்படி பெயர் வச்சா எவனும் படத்த வாங்க மாட்டான்... வெங்கட் பிரபு வைத்த பெயரை மாற்றிய வாலி - சென்னை 28 சீக்ரட்ஸ்

34
Anna Serial Update

Anna Serial Update

இந்த விஷயத்தை சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டியிடம் சொல்ல அவர் அப்படித்தான் என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறார். அப்படியே மறுபக்கம் சண்முகம் சூடாமணியை வந்து ஜெயில் சந்தித்து இசக்கிக்கு கல்யாணமான விஷயம், பஞ்சாயத்தில் நடந்தது என அனைத்தையும் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

உன்னை நம்பி என் பொண்ணுங்கள விட்டுட்டு வந்தேனே என் முகத்திலேயே முழிக்காத போடா என்று கோபப்பட்டு திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் சண்முகம் மனம் உடைந்து போகிறான். வீட்டில் சண்முகத்தை காணாததால் எல்லோரும் பதறி போய் தேடத் தொடங்குகின்றனர். பரணிக்கும் தகவல் கொடுக்க அவளும் அதிர்ச்சியாகி சண்முகத்தை தேடி அலைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... தீபாவின் கச்சேரியில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை... கார்த்தி செய்தது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved