MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமா? எவ்வளவு செலவாகும்? எப்படி முன்பதிவு செய்வது?

திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமா? எவ்வளவு செலவாகும்? எப்படி முன்பதிவு செய்வது?

நடிகை ஜான்வி கபூரும் அவரது காதலர் ஷிகர் பஹாரியாவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய எவ்வளவு செலவாகும்? திருப்பதியில் திருமணத்தை நடந்த என்ன வழிமுறை என்ன என்று பார்க்கலாம்.

2 Min read
SG Balan
Published : May 18 2024, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Tirupati Temple Marriage Booking

Tirupati Temple Marriage Booking

திருமலையில் திருமணம் செய்துகொள்வது தம்பதிகளுக்கு நல்வாழ்வைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இங்கு திருமணங்கள் பிரதான கோவிலுக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும். திருமணம் முடிந்த பிறகு, புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண உடையில் பிரதான கோயிலில் உள்ள தெய்வத்தை தரிசனம் செய்யலாம்.

27
Tirupati Temple Wedding

Tirupati Temple Wedding

திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபங்களில் 50 முதல் 500 உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பெரிய அரங்குகளுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். திருமண மண்டபத்திற்கு ஆன்லைன் முன்பதிவு முறை இல்லை.

37
Tirumala Tirupati Marriage

Tirumala Tirupati Marriage

திருமலையில் இந்து திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அரசு விதிகளின்படி மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் இருக்க வேண்டும். திருப்பதியில் திருமணம் செய்ய மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் இருப்பது அவசியம். திருமலையில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணத்திற்கும் அனுமதி உண்டு.

47
Marriage at Tirupati Temple

Marriage at Tirupati Temple

ஒரே நேரத்தில் பல ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இங்கு நடக்கும் திருமணங்களுக்கு, ஒரு நாள் முன்னதாகவே ஆவண சரிபார்ப்பு அவசியம். எனவே மண்டப திருமணத்திற்கு, அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். திருமணக் குழுவினர் பூஜைப் பொருட்களை அவர்களே வாங்க வேண்டும். திருமண மண்டபங்கள் மாலை 3 மணி முதல் 3 மணி வரை கிடைக்கும்.

57
Tirupati Wedding Procedure

Tirupati Wedding Procedure

திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் அட்டை நகல் மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் பிறந்த தேதி சான்றிதழின் புகைப்பட நகலுடன் கோயிலில் சமர்ப்பிக்க வேண்டும். மணமகளின் பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோரின் ஆதார் அட்டை நகலையும் இணைக்க வேண்டியது அவசியம். பெற்றோர் இல்லாத பட்சத்தில், பெற்றோரின் இறப்புச் சான்றிதழை திருமண பதிவுக்கு சமர்ப்பிக்கலாம்.

67
Tirupati Temple Wedding Cost

Tirupati Temple Wedding Cost

திருப்பதியில் நடக்கும் திருமணங்களுக்கு தேவஸ்தானம் திருமண சான்றிதழ் வழங்குவதில்லை ஆனால் திருமண பதிவுக்கான ரசீதை வழங்குகிறது. திருமணம் முடிந்தவுடன் , அங்கு அரசு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவுசெய்ய 30 முதல் 45 நிமிடங்கள் ஆகலாம்.

 

77
Tirumala Tirupati Devasthanam

Tirumala Tirupati Devasthanam

திருமணத்தைப் பதிவு செய்ய, மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் அட்டை, 10வது மதிப்பெண் பட்டியல் அல்லது பிறந்த தேதி சான்றிதழ் அல்லது திருமணச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், மணமகன் மற்றும் மணமகளின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை. இத்துடன் இருவரின் பெற்றோரின் ஆதார் அட்டையின் நகல், திருமண அழைப்பிதழ், திருமண விவரங்கள் அடங்கிய நம்பிக்கைக் கடிதம், மூன்று சாட்சிகள் மற்றும் அவர்களின் ஆதார் அட்டைகளின் நகல் ஆகியவையும் அவசியம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved