- Home
- Gallery
- கவினை விட டம்மியான சந்தானம்... ‘இங்க நான் தான் கிங்கு’ படத்துக்கு ஸ்டார் பட வசூலில் பாதி கூட கிடைக்கல
கவினை விட டம்மியான சந்தானம்... ‘இங்க நான் தான் கிங்கு’ படத்துக்கு ஸ்டார் பட வசூலில் பாதி கூட கிடைக்கல
Inga Naan Thaan Kingu Day 1 Box Office : ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

santhanam
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சந்தானம். அந்நிகழ்ச்சி ஹிட் ஆனதை தொடர்ந்து அவரின் திறமையை பார்த்து வியந்துபோன நடிகர் சிம்பு அவரை தன்னுடைய படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகப்படுத்தினார். அதன்பின்னர் விஜய், அஜித், ரஜினி என டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்த சந்தானம், வடிவேலு, கவுண்டமணி போன்ற லெஜண்ட் பட்டியலிலும் இடம்பிடித்து அசத்தினார்.
santhanam new movie
காமெடியனாக செம்ம பிசியாக நடித்து வந்த சந்தானத்துக்கு திடீரென ஹீரோ ஆசை வந்ததால், காமெடி வேடங்களுக்கு முழுக்கு போட்டு இனி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தார். இதையடுத்து அவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றாலும், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுக்கு வரிசையாக தோல்வியை தழுவியதால் சந்தானத்தின் மார்க்கெட் மளமளவென சரிந்தது.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகும் கோட்.. அமெரிக்காவில் இருந்து விஜய் படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு
Inga Naan thaan Kingu
பின்னர் கடந்தாண்டு வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் படம் மூலம் கம்பேக் கொடுத்த சந்தானத்துக்கு, இந்த ஆண்டு வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் ‘இங்க நான் தான் கிங்கு’. இப்படத்தை ஆனந்த் நாராயணன் இயக்கி இருந்தார். மதுரை அன்புச்செழியன் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து இருந்தார்.
Inga Naan thaan Kingu Box Office collection
இந்நிலையில், நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் அப்படம் பெரியளவில் சோபிக்கவில்லை. அதன்படி இங்க நான் தான் கிங்கு திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. கடந்த வாரம் ரிலீஸ் ஆன கவினின் ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் ரூ.2.8 கோடி வசூலித்து இருந்தது. அதில் பாதி கூட சந்தானம் படத்திற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வருவதால் இன்று முதல் படம் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... AR Rahman : ரொம்ப பெருமையா இருக்கு... மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி