- Home
- Gallery
- ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகும் கோட்.. அமெரிக்காவில் இருந்து விஜய் படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு
ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகும் கோட்.. அமெரிக்காவில் இருந்து விஜய் படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு
கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த இயக்குனர் வெங்கட் பிரபு அப்படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

GOAT movie
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். விஜய்யும் வெங்கட் பிரபு இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
GOAT Movie vijay
கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், நிதின் சத்யா, சினேகா, பிரேம்ஜி, லைலா, வைபவ், மைக் மோகன், பார்வதி நாயர். யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சென்னை, ஐதராபாத், கேரளா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு ஒருவழியாக ஷூட்டிங்கை நிறைவு செய்து தற்போது பின்னணி பணிகளில் பிசியாக உள்ளது.
இதையும் படியுங்கள்... AR Rahman : ரொம்ப பெருமையா இருக்கு... மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி
vijay, venkat prabhu
கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி திரைக்கு வர உள்ளது. இதனால் இப்படத்தின் பின்னணி பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால் அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர். அதற்கான பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
GOAT movie VFX work Finished
அமெரிக்காவில் உள்ள லோலா என்கிற வி.எப்.எக்ஸ் நிறுவனம் தான் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிறுவனம் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி இருக்கிறது. இந்த நிலையில், கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில், அதற்காக விஜய், வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்காவில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இவங்களுக்கு 37 வயசுனு சொன்னா யார் நம்புவா... 20 வயசு யங் ஹீரோயின் லுக்கில் கலக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்