MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இப்படி பெயர் வச்சா எவனும் படத்த வாங்க மாட்டான்... வெங்கட் பிரபு வைத்த பெயரை மாற்றிய வாலி - சென்னை 28 சீக்ரட்ஸ்

இப்படி பெயர் வச்சா எவனும் படத்த வாங்க மாட்டான்... வெங்கட் பிரபு வைத்த பெயரை மாற்றிய வாலி - சென்னை 28 சீக்ரட்ஸ்

வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான சென்னை 600028 படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயரை கவிஞர் வாலி மாற்றியதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2024, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai 600028

Chennai 600028

கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு, சினிமாவில் ஆரம்பத்தில் நடிகராக அறிமுகமானார். அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகாததால், இயக்குனராக அவதாரம் எடுத்தார். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் அவர் நேரடியாக இயக்கிய தமிழ் படம் தான் சென்னை 600028. இப்படத்தை எஸ்.பி.பியின் மகன் சரண் தயாரித்திருந்தார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

24
Venkat Prabhu

Venkat Prabhu

சென்னை 600028 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அப்படம் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமின்றி அதில் நடித்த சிவா, ஜெய், விஜயலட்சுமி, நிதின் சத்யா, பிரேம்ஜி உள்பட ஏராளமானோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னை 28 படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித் தற்போது தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளார். அந்த அளவுக்கு பல திறமையாளர்களுக்கு அடையாளத்தை கொடுத்தது அப்படம்.

இதையும் படியுங்கள்... பேத்தியின் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய விஜயகுமார்... ரஜினி உள்பட படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

34
Venkat Prabhu

Venkat Prabhu

சென்னை 28 படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தனர். அப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில், சென்னை 28 படத்தின் ரிலீஸுக்கு முன் நடந்த சில சுவாரஸ்ய சம்பவம் பற்றி பார்க்கலாம். அதன்படி இப்படத்திற்கு வெங்கட் பிரபு முதன் முதலில் வைத்த பெயர் சென்னை 28 இல்லையாம். அவர் வைத்த பெயரை வாலி தான் மாற்றி சென்னை 28 என வைக்க சொன்னாராம்.

44
vaali

vaali

வெங்கட் பிரபு இப்படத்திற்கு முதன்முதலில், ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என பெயர் வைத்திருந்தாராம். இந்த தலைப்பை வாலியிடம் போய் சொன்னபோது, அவர் இப்படி தலைப்பு வச்சா படத்தை எவனும் வாங்க வர மாட்டான்யா, சென்னை 28-னு வை என சொல்லி அனுப்பினாராம். வாலியின் பேச்சை கேட்டு வெங்கட் பிரபு மாற்றிய அந்த டைட்டில் தான் இன்று அவருக்கு ஒரு அடையாளமாக உள்ளது. இதனால் தான் தன்னுடைய அனைத்து படங்களிலும் வாலிக்கு நன்றி சொல்லி படத்தை ஆரம்பிப்பாராம் வெங்கட் பிரபு.

இதையும் படியுங்கள்... அப்படி போடு.! தளபதி விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved