MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கொலைவெறியுடன் வந்த சண்முகம்.. முத்துப்பாண்டியை கொன்றாரா? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

கொலைவெறியுடன் வந்த சண்முகம்.. முத்துப்பாண்டியை கொன்றாரா? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டியை வெட்டி கொல்ல ஷண்முகம் ஆவேசமாக கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2024, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் முத்துப்பாண்டியை வெட்டி கொல்ல ஷண்முகம் ஆவேசமாக கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டில் சௌந்தரபாண்டி காரியமெல்லாம் கெட்டுப்போச்சு திட்டமெல்லாம் நாசமா போச்சு என முத்து பாண்டியை திட்டிக் கொண்டிருக்க பரணி போன் செய்து சண்முகம் பயங்கர கோபத்துடன் முத்துப்பாண்டி கொல்ல வரும் விஷயத்தை சொல்லி உஷார் படுத்துகிறாள்.

24
zee tamil anna serial

zee tamil anna serial

இதனால் வீட்டில் ஜன்னல் கதவு அனைத்தையும் மூடி உள்ளே பத்திரமாக இருக்க கோபமாக வந்த சண்முகம் கதவை திறக்க சொல்லி சத்தம் போட முத்து பாண்டி இங்கே இல்லை என சொல்கின்றனர். ஆனால் சிவபாலன் மாமா அவன் உள்ள தான் இருக்கான் அவனை விடாத கொல்லு என கூறுகிறான். அதே சமயம் பரணி வந்து சண்முகத்தை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். 

இதையும் படியுங்கள்... பல்லவிக்கு பாராட்டு விழா.. கார்த்திக்கின் பிளானை கேட்டு அதிர்ந்து போன சினேகா- கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

34
anna serial Update

anna serial Update

வீட்டுக்கு வந்த சண்முகத்திலும் இசக்கி அவனை கொன்னுட்டியா அண்ணா என்று கேட்க இல்ல அவன கொல்லுற வரைக்கும் இந்த தாலி கழுத்திலே இருக்கட்டும் என கூறுகிறான். பரணி சண்முகத்திடம் அன்பாக பேச முயற்சி செய்ய உன் அண்ணனை காப்பாத்த இப்படி செய்யாத என சண்முகம் கோபப்படுகிறான். என்ன இருந்தாலும் அவன கொல்லாமல் விட மாட்டேன் என்று புலம்ப பரணி ஊசி போட்டு அவனை தூங்க வைக்கிறாள். 

44
Anna serial Today episode

Anna serial Today episode

மறுபக்கம் சௌந்தரபாண்டி பாண்டியம்மா ஆகியோர் பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி மாத்தி குடிச்சிட்டா என்று பேசிக் கொண்டிருக்க இதை சிவபாலன் கேட்டுவிட இதை இவர்கள் யாரோ ஒட்டு கேட்டு விட்டதாக உணர்கின்றனர். உடனே இந்த விஷயங்கள் வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் அவன் யாருன்னு கண்டுபிடிச்சு கொன்னுடனும் என்று சொல்ல சிவபாலன் எஸ்‌கேப் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... "எங்கள் வீட்டு தெய்வமே.. என்றும் உன் நினைவோடு".. இறந்த மனைவிக்கு நினைவு அஞ்சலி - மனமுறுகிய மதுரை முத்து!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved