Standup Comedian Madurai Muthu : மதுரை முத்து அவர்கள் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியனாக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகின்றார்.

90களில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நகைச்சுவை பேச்சாளர் தான் மதுரை முத்து. கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "அசத்தப் போவது யாரு" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தனது நகைச்சுவை பேச்சால் மிகவும் பிரபலமான ஒரு மேடைப் பேச்சாளர் அவர். 

மதுரை முத்து அவருடைய டைமிங் காமெடியும் அவரிடம் உள்ள தமிழ் ஆர்வமும் மக்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் சிறந்த நகைச்சுவை கலைஞராக பயணித்து வரும் மதுரை முத்து இப்பொழுது பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று அசத்தி வருகின்றார். 

ஆதிக் இயக்கத்தில் AK 63.. மீண்டும் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறாரா அஜித்? துணிந்து பலே பிளான் போடும் இயக்குனர்!

இந்நிலையில் மதுரை முத்து அவர்களுடைய மனைவி லேகா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்து நேற்று ஜனவரி 4ம் தேதியோடு 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய நினைவஞ்சலி போஸ்டர் பகிர்ந்துள்ளார். 

View post on Instagram

மதுரையை அடுத்துள்ள திருமங்கலம் டி அரசபட்டியை சேர்ந்தவர் மதுரை முத்து என்பது குறிப்பிடத்தக்கது. பல மேடைகளில் கலக்கியுள்ள மதுரை முத்து தனது மனைவியின் இறப்பு குறித்து மிகவும் நெகழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 

சூர்யா 3 வேடத்தில் கலக்கிய '24' படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஹீரோயினிலும் ஏற்பட்ட மாற்றம்!