MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சூர்யா 3 வேடத்தில் கலக்கிய '24' படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஹீரோயினிலும் ஏற்பட்ட மாற்றம்!

சூர்யா 3 வேடத்தில் கலக்கிய '24' படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஹீரோயினிலும் ஏற்பட்ட மாற்றம்!

நடிகர் சூர்யா நடிப்பில், 2016 ஆம் ஆண்டு வெளியான '24' படத்தில் சூர்யாவுக்கு முன்பு நடிக்க இருந்த ஹீரோ யார் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 05 2024, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வரும் சூர்யா, கடந்த 2016 ஆம் ஆண்டு 3 வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் 24. இந்த படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.

25
Actor Suriya

Actor Suriya

டைம் டிராவல் செய்யும் வாட்சை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு 64 ஆவது ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் இந்த படத்திற்காக வாங்கினார் திரு.

Trisha: த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பார்ட்.. 18 வருடத்திற்கு பின் 68 வயது நடிகருக்கு ஜோடியான சவுத் குயின்!
 

35
Suriya

Suriya

70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், சுமார் 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. திரு ஒளிப்பதிவில். பிரவீன் குடி படத்தொகுப்பு செய்திருந்தார்.
 

45
Vikram New Movie

Vikram New Movie

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் விக்ரம் குமார் '24' படத்தின் கதையை முதலில் பிரபல நடிகர் விக்ரமிடம்தான் கூறினாராம். அவருக்கு கதை பிடித்திருந்த போதும், விக்ரம் இருமுகன் படத்தில் பிஸியாக நடித்து வந்ததால், 24 படத்தில் நடிக்க முடியாமல் போனது. 

கொடுமைக்கார அப்பா.. கண்முன்னே நெருப்பில் கருகி உயிரிழந்த அம்மா! நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?
 

55
AR Rahman

AR Rahman

எனவே மற்றொரு நடிகரை வைத்து இயக்க முடிவு செய்தார் விக்ரம் குமார். நடிகர் சூர்யாவை அணுகிய போது இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி, இந்த படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தார். சமந்தாவுக்கு பதில் இந்த படத்தில் நடிகை இலியானா முதலில் கமிட் ஆன நிலையில்... பின்னர் அவர் வெளியேறியதும் சமந்தா உள்ளே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த படத்திற்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க முடிவு செய்யப்பட்டது. சூர்யா ஏ.ஆர்.ரகுமான் இசை தான் வேண்டும் என கூறியதால்... ஹாரிஸ் ஜெயராஜ் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
நடிகர் விக்ரம்
சமந்தா ரூத் பிரபு
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved