MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கொடுமைக்கார அப்பா.. கண்முன்னே நெருப்பில் கருகி உயிரிழந்த அம்மா! நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

கொடுமைக்கார அப்பா.. கண்முன்னே நெருப்பில் கருகி உயிரிழந்த அம்மா! நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்படும் நாஞ்சில் விஜயன் முதல் முறையாக, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 05 2024, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விஜய் டிவி காமெடி பிரபலமாக அறியப்படுபவர் நாஞ்சில் விஜயன். தன்னுடைய காமெடியான பேச்சாலும், நடிப்பாலும், பல ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இவரின் இவரின் நிஜ வாழ்க்கை, மிகப்பெரிய துயரங்கள் கொண்டதாக உள்ளது. முதல் முறையாக தன்னுடைய அம்மா பற்றி ரசிகர்கள் நெஞ்சங்களை கலங்க வைத்துள்ளார் நாஞ்சில் விஜயன்.
 

27

நாஞ்சில் விஜயனின் சொந்த ஊர் நாகர்கோவில். பாலிடெக்னிக் படித்து வந்த நாஞ்சில் விஜயன், அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன்னுடைய தங்கை மற்றும் தம்பியை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்கிற கடமை உணர்வுடன் 17 வயதிலேயே சென்னைக்கு வந்தார். காமெடி மீது இவருக்கு இருந்த ஈர்ப்பும், நண்பர்களின் தூண்டுதலும், கலக்கப்போவது யாரு சாம்பியன்ஷிப் நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்தது.
 

37

இந்த நிகழ்ச்சியில் இவர் தான் மற்ற போட்டியாளர்களை விடமும் வயது குறைந்தவர். அனுபவமும் குறைவு என்பதால், காமெடியை கூட ஸ்கிரிப்ட் ஆக எழுதி வைத்துக்கொண்டு ஒப்பிக்கும் தொனியில் பேசினார். போட்டிகள் கடுமையாகி கொண்டே சென்றதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
 

47

இதன் பின்னர் விஜய் டிவியில் 'அது இது எது' என்கிற நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் வேலை கிடைத்துள்ளது. அதனை சிறப்பாக செய்து கொண்டே, இந்த நிகழ்ச்சியில் காமெடி வேடத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில காமெடி நிகழ்ச்சிகளில் இவர் பெண் வேடம் அணிந்து நடித்தது இவரை பிரபலமாக்கியது.
 

57
Nanjil Vijayan marriage

Nanjil Vijayan marriage

மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய தம்பியை படிக்க வைத்து, தங்கையை திருமணம் செய்து கரை சேர்த்துள்ள நாஞ்சில் விஜயன்... சமீபத்தில் தான் மரியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் தன்னுடைய தாய் தந்தை குறித்து உணர்வு பூர்வமாக பேசியுள்ளார்.
 

67

இது குறித்து அவர் கூறுகையில்... இவருடைய தந்தை ஒரு மிகப்பெரிய குடிக்கறாராம். தினமும் குடித்துவிட்டு வந்து இவனுடைய அம்மாவை அடித்து கொடுமைப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் கணவர் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டு தன்னுடைய பிள்ளைகளை வீட்டு வேலை செய்து வளர்த்து வந்துள்ளார் நாஞ்சில் விஜயன் தாயார்.
 

77

ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல், மண்ணெனையை தன்னுடைய மேலே ஊற்றி நாஞ்சில் விஜயன் கண் முன்பே தீக்குளித்து இறந்து விட்டாராம்.  இந்த தகவலை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கலங்க வேண்டாம், உங்களின் தாயாரின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும் என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved