வயது வெறும் 23.. கோடிக்கணக்கில் சொத்து.. ஆடம்பர கார்கள் என்று டக்கர் வாழ்கை - யார் அந்த அசத்தல் நடிகை?
Young Actress : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டால் போதும், அவர்கள் அதிவிரைவில் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறிவிடுவது அனைவரும் அறிந்த ஒன்றே.
Anjali Arora
அந்த வகையில் அஞ்சலி அரோரா என்கின்ற பாலிவுட் நடிகை, இன்னும் பெரிய அளவில் படங்களில் நடிக்காத நிலையில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடிப்பதன் மூலம் மிகப்பெரிய புகழையும் பணத்தையும் ஈட்டி உள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் பல உயரங்கள் தொட்ட அந்த இளம் நாயகி ஆவார்.
தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே பாலிவுட்டிலும் கடந்த பல ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் காடு போட்டியாளராக பங்கேற்று புகழ் பெற்றவர் அஞ்சலி அரோரா என்று கூறப்படுகிறது.
Actress Anjali Arora
மேலும் பிக் பாஸை போலவே "லாக் கப்" என்கின்ற ரியாலிட்டி ஷோ ரூம் பாலிவுட் உலகில் பிரபலம். இந்நிலையில் அந்த ஷோதான் இவருக்கு மிகப்பெரிய புகழை கொடுத்தது என்று கூறப்படுகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி அரோரா மியூசிக் வீடியோக்களையும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றார்.
Actress Anjali
தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கே இன்ஸ்டாகிராமில் இரண்டு முதல் பத்து மில்லியன் followers தான் இருக்கின்றனர். ஆனால் அஞ்சலி அரோராவை சுமார் 13.3 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தன்னுடைய பெற்றோருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்த அஞ்சலி அரோரா தன்வசம் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடம்பர மற்றும் நடுத்தர விலை கொண்ட கார்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது டெல்லியின் மையப்பகுதியில் சுமார் 4 கோடி ரூபாயில் இவர் ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். இளம் நடிகை ஒருவர் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சிபடுத்தி வருகிறது.