பூவா தலையா சீரியலால்.. சூப்பர் ஹிட் சீரியலுக்கு வந்த சோதனை! அதிரடியாக மாற்றப்படும் நேரம்.. கடுப்பில் ரசிகர்கள்
சன் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தாக்கல் ரசிகர்களை கடும் அப்செட் ஆக்கியுள்ளது.
Sundari Serial
பல வருடங்களாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதுவும் ப்ரைம் டைம் சீரியல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். 5 மணியில் இருந்து 11:00 மணிவரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் இடையே வரும் விளம்பரங்களை கூட மிஸ் பண்ணாமல் பார்க்கும் பல இல்லத்தரசிகள் உள்ளனர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட ஆனந்த ராகம் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஈஸ்வரி போல செம்ம கெத்தா, தைரியமா எந்த பிரச்சனை வந்தாலும் ஃபேஸ் பண்ண வேண்டும் என, அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இந்த சீரியலின் கதாநாயகி கதாபாத்திரம் இல்லத்தரசிகளே தாண்டி இளம் ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரம் 6 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. TRP-யிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வரும் இந்த சீரியல் நேரம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ளது தான் ரசிகர்களின் அப்செட்டுக்கு காரணம்.
இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில், சன் டிவியில் சித்தாரா சின்னத்திரையில் புதிதாக நடிக்கும் 'பூவா தலையா' சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும், எனவே 'ஆனந்த ராகம்' இரவு 11:30 மணிக்கு ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!
அதே நேரம் 'பூவா தலையா' சீரியல்... பாண்டவர் இல்லம் தற்போது முடிவடைய உள்ளதால் அந்த சீரியல் நேரத்தில் ஒளிபரப்பாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எந்த நேரத்தில் இந்த புது சீரியல் ஒளிபரப்பாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D